ஒரேஒரு பெண் பயணியுடன் வந்த டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ்
1 min read
Delhi Rajdhani Express with only one female passenger
4-9-2020
டெல்லியில் இருந்து ராஞ்சிக்கு வந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஒரே ஒரு பெண் மட்டும் வந்தார்.
ராஜ்தானி எக்ஸ்பிரஸ்
டெல்லியில் இருந்து ராஞ்சி நோக்கி வந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ், டோரி சந்திப்பில், டானா அமைப்பினர் நடத்திய போராட்டத்தால் பாதியில் நின்றது. இதனையடுத்து, ரெயிலில் இருந்த 930 பயணிகளுக்கும் பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆனால், அந்த ரெயிலில் பயணம் செய்த அனன்யா என்ற பெண் மட்டும் தான் ரெயிலை விட்டு இறங்க மாட்டேன் என்றும் ரெயிலில் தான் செல்வேன் என உறுதியாக கூறினார்.
ரெயில் நின்ற இடத்தில் இருந்து ராஞ்சிக்கு பஸ்சில் செல்ல 225 கிலோமீட்டர் தூரம் என்றும், ரெயில் பயணத்தை விட பஸ் பயணம் அதிகம் என்று அந்த பெண் கூறினார். அதனால்தான் தான் ரெயில் செல்ல விரும்புவதாகவும் அவர் கூறினார். மேலும் அந்தப் பெண் இந்திய ரயில்வேயின் டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டார்.
ஒரேஒரு பெண்ணுடன்…
இதனையடுத்து வேறு வழியின்றி அந்த ரெயில் அந்த ஒரு பெண்ணுக்காக 15 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. அந்த ரெயில் இன்று( வெள்ளிக்கிழமை) காலை 1.45 மணிக்கு ராஞ்சி வந்து அடைந்தது.