Fri. May 7th, 2021

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 3,57,229 பேருக்கு கொரோனா ; 3,449 பேர் பலி

1 min read

Corona for 3,57,229 people in a single day in India; 3,449 people were killed

4//2021
இந்தியாவில் ஒரேநாளில் 3,57,229 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அதேபோல் ஒரே நாளில் 3,449 பேர் கொரோனாவுக்க இறந்துள்ளனர்.

கொரோனா 2வது அலை

இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 3 லட்சத்தை தாண்டிவிட்டது. கொரோனாவுக்கு உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
இதனால் நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று ஒரே நாளில் 3,57,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,02,82,833 உயர்ந்துள்ளது.

3,449 பேர் பலி

நேற்று ஒரே நாளில் 3,449 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,22,408 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 3,20,289 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,66,13,292 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி

தற்போது நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 34,47,133 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நாடு முழுவதும் நேற்று வரை 15,89,32,921 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *