Fri. May 7th, 2021

Seithi Saral

Tamil News Channel

மேற்குவங்காளத்தில் வன்முறை; 6 பேர் பலி

1 min read

6 person killed in west bangal for vayalance

4/5/2021

மேற்கு வங்காளத்தில் தேர்தலுக்கு பின்பு வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. இதில் 6 பேர் கொல்லப்பட்டதாக பாரதீய ஜனதா கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

தேர்தலுக்கு பிறகு..

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து, முடிவுகளும் வெளியாகிவிட்டன.
மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும், பாரதீய ஜனதாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. அங்கு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. ஆனால் முதல்மந்திரி மம்தா பானர்ஜி போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வியை தழுவினார்.

இவரின் தோல்வியை அடுத்து அந்த தொகுதியிலும், மாநிலத்தில் பல ஊர்களிலும் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. பாரதீய ஜனதா தொண்டர்களை குறிவைத்து தாக்குவதாக அந்தக் கட்சியினர் கூறிவருகிறார்கள். பாரதீய ஜனதா அலுவலகம் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீ வைப்பு சம்பவமும் அங்கு நிகழ்ந்தது.

அதேப்போன்று திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்கள், வீடுகள், கடைகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பதற்றம்

இதுபோன்ற வன்முறை சம்பவங்களால் மாநிலத்தில் ஒரு விதமான பதற்றமான சூழல் உருவாகிறது. இந்த வன்முறைகளுக்கு யார் காரணம் என்று திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகிறார்கள். இதுபற்றி சமூக வலைதளங்களிலும் பதிவி்ட்டு வருகிறார்கள்.

6 பேர் கொலை

இதற்கிடையே பாரதீய ஜனதா கட்சி தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் 6 பேர் கொல்லப்பட்டதாகவும் ஏராளமான கடைகள் சூறையாடப்பட்டு, தீ வைக்கப்பட்டதாகவும் அந்தக் கட்சியினர் குற்றஞ்சாட்டி வீடியோ ஆதாரங்கள் என சில பதிவுகளையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து மேற்கு வங்காள அரசிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.

பிரதமர் மோடி

இதற்கிடையில் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் அமைதி காக்கவேண்டும் என்றும் வன்முறையை தூண்ட வைக்கும் பாரதீய ஜனதாவினரின் முயற்சிகளுக்கு பலியாகி விடக் கூடாது என்றும் முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவுறுத்தியுள்ளார்.

மேற்கு வங்காளத்தில் நடந்த வன்முறை பற்றி பிரதமர் மோடி அந்த மாநில கவர்னரிடம் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *