July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

கொரோனாவுக்கு இந்தியாவில் 2 பேர் சாவு; கை கழுவ வசதி செய்து கொடுக்க வேண்டும்

1 min read
Seithi Saral featured Image

2 person died for Corona in India; do take Provide hand wash facilities

14/3/2020

கொரோனா வைரஸ் தாக்குதலில் டெல்லியில் சிகிச்சை பெற்றுவந்த 69 வயதான ஒரு பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்தியாவில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆவி விட்டது.

கொரோனா

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், தற்போது நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்தியாவையும் அது விட்டு வைக்க வில்லை. எத்தனையோ முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தும் இந்தியாவுக்கள் அது புகுந்துவிட்டது.
இந்தியாவில் இதுவரை 81 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த கொரோனாவுக்கு கர்நாடக மாநி லத்தில் முதியவர் ஒருவர் இறந்தார். சர்க்கரை நோயும், ரத்தக்கொதிப்பும் இருந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தாலும் கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி இறந்தாா்.

பெண் சாவு

இந்த நிலையல் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான 69 வயது பெண் டெல்லி ராம் மனோகா் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவரும் இறந்துவிட்டார். இதனை மத்திய அரசும், டெல்லி சுகாதாரத்துறையும் உறுதி செய்துள்ளது.

மகனிடம் இருந்து தாய்க்கு பரவியதா?

டெல்லியில் இறந்த பெண் காய்ச்சல், சளி, இருமல் காணப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

இறந்த பெண்ணின் மகன் கடந்த மாதம் இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று விட்டு டெல்லி திரும்பினார்.
அதன்பின் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. மேலும் அவரது தாய்க்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் கடந்த 7-ந்தேதி டெல்லி ராம் மனோகர் லோதியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

9-ந் தேதி அப்பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது இரண்டாக உயர்ந்துள்ளது.

தற்போது இந்தியா முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் வவேண்டாம் என்று தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. அதேபோல் சபரிமலைக்கும் பக்தர்கள் வரவேண்டாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அய்யப்பன் கோவில் நடை பங்குனி மாத பூஜைக்காக (நேற்று) வெள்ளிக்கிழமை மாலை திறக்கப்பட்டது .

இன்று (சனிக்கிழமை) முதல் முதல் மார்ச் 18 வரை 5 நாட்கள் பூஜை வழிபாடு நடைபெறும்.கணபதி ஹோமம் நெய்யபிஷேகம் நடைபெறும். ஆனால் படிபூஜை, உதயஸ்தமனபூஜை உட்பட முக்கிய பூஜைகள் கொரோனா பரவலால் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் நோய் மற்றும் பறவைக் காய்ச்சல் காரணமாக சபரிமலையில் கட்டுப்பாடுகள் அதிகம் அமுல்படுத்த ப்பட்டுள்ளது. இதனால் சபரிமலையில் பிரதானமாக நடைபெறும் உதயஸ்தமன பூஜை, படிபூஜை வழிபாடு சபரிமலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. பம்பை சபரிமலையில் தங்கும் விடுதிகள் பக்தர்களுக்கு வழங்கப்படாது. முன்பதிவும் ரத்து செய்யப்பட்டது.அப்பம், அரவணை பிரசாதம் கவுண்டர் இயங்கவில்லை. பிரசாதங்களை தயாரிக்கவும் விற்பனையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தேவஸ்வம் போர்டு அதிகாரிகள் வழக்கமான பணிகள் தவிர சிறப்பு பணியில் ஈடுபடமாட்டார்கள்.ஓட்டல் இயங்கவில்லை. நிலக்கல் பம்பை சபரிமலையில் அன்னதானம் வழங்குவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் பம்பை சபரிமலையில் செயல்படாது. அவசரப்பிரிவு மட்டும் இயங்கும். கேஎஸ்ஆர்டிசி பம்பைக்கு சிறப்பு பஸ்களை இயக்கவில்லை. இதனால் பக்தர்கள் சபரிமலை வருவதை தவிர்க்க தேவசவ ம் போர்டு கேட்டுக்கொண்டுள்ளது. மீறி வருபவவர்கள் தேவையான வசதிகளை தங்கள் சொந்த பொறுப்பில் செய்துகொள்ள வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.இவைகளை தெரியாமல் நேற்று ( வெள்ளிக்கிழமை) சபரிமலையில் வெளிமாநில பக்தர்கள் நூற்றுக்கணக்கில் இருமுடி கட்டி வந்திருந்தனர். இவர்கள் உணவு மற்றும் இதரவசதிகள் கிடைக்காமல் அவதிப்பட்டனர். பக்தர்கள் பம்பையில் இருந்து தீவிரமாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்பே மலையேற அனுப்பி வைத்தனர்.

தமிழகத்தில்

தமிழகத்தில் மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்த நோய் பரவாமல் இருக்கு அடிக்கடி கை கழுவ வேண்டும் என்று அறிவுறுதப்பட்டு உள்ளது. ரெயில், பஸ்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கபடுகிறது. அதேபோல் பொதுமக்கள் கூடும் இடங்களில் கைகழுவ தண்ணீர் வசதி செய்யப்பட்டால் நன்றாக இருக்கும். தனியார் நிறுவனங்களிலும் கை கழுவ வசதிவாய்ப்புகளை ஏற்படுத்த அறிவுறுத்த வேண்டும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.