மும்பைக்கு விமானத்தில் ரூ.18 கோடி ஹெராயின் கடத்தி வந்த பெண் கைது
1 min read
Woman arrested for smuggling Rs 18 crore worth of heroin on flight to Mumbai
24.9.2021
மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய பெண் பயணியிடம் இருந்து ரூ.18 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
பெண் கைது
மராட்டிய மாநிலம் மும்பை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த விமானத்தில் விமான உளவு பிரிவு அமைப்பினர் நடத்திய சோதனையில் சந்தேகத்திற்குரிய வகையிலான பெண் ஒருவர் பிடிபட்டார்.
40 வயது மதிக்கத்தக்க அவரிடம் இருந்து ரூ.18 கோடி மதிப்பிலான 3.584 கிலோ எடை கொண்ட ஹெராயின் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர் ஜாம்பியா நாட்டில் இருந்து வர்த்தக சுற்றுலாவுக்காக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். சிலுபியா செகேதி என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
1 thought on “மும்பைக்கு விமானத்தில் ரூ.18 கோடி ஹெராயின் கடத்தி வந்த பெண் கைது”