July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

பாரதீய ஜனதா மாநிலத் தலைவர் செயல்பாடு எப்படி இருக்கும்?

1 min read
How does the Bharatiya Janata Party leader function?

14/3/2020

வருகிற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பாரதீய ஜனதா எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இடம்பெறுவார்கள் என்று தமிழக பாரதீய ஜனதா தலைவர் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவரது செயல்பாடுகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

முருகன் நியமனம்

தமிழக பாரதீய ஜனதா தலைவராக சமீபத்தில் எல்.முருகன் நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி சென்னை தியாராய நகரில் உள்ள பாரதீய ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் எல்.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு முருகன் பேசியதாவது:-

பயணம்

பாரதீய ஜனதா மூத்த தலைவர்களின் ஆதரவோடு வழிகாட்டுதலோடு இந்த இடத்தில் அமர்ந்துள்ளேன்.வரும் தேர்தலில் வெற்றிபெற்று பாரதீய ஜனதா எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இடம்பெறுவார்கள். அதை நோக்கியதாகவே எனது பயணம் இருக்கும்.மக்களிடத்தில் பாரதீய ஜனதாவின் கொள்கைகளை கொண்டு செல்வோம்;

தமிழக நலன், தமிழர்கள் நலனை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் .பாரதீய ஜனதாவில் தற்போது இளைஞர்கள் மற்றும் படித்தவர்கள் அதிக அளவில் இணைந்து வருகிறார்கள். அவர்களோடு இணைந்து பணியாற்றுவதற்கு காத்திருக்கிறேன்.

பரப்புரை

சிஏஏ உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக நடைபெறும் தவறான பிரசாரங்களுக்குப் பதிலாக, வரும் 20-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரை “உண்மையைச் சொல்வோம்; உரக்கச் சொல்வோம்’ என்னும் பரப்புரை பயணத்தை எல்லா கிராமங்களிலும் மேற்கொள்ள உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சாதகம்

புதிய தலைவராக நியமிக்கப்பட்ட முருகன்
டாக்டர் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரியில் பி.எல். படிப்பும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.எல். படிப்பும் படித்தவர். சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். 15 வருடம் வழக்கறிஞர் அனுபவம் உள்ளவர்.
இத்தனை தகுதி படைத்தவரைத்தான் அக்கட்சி மாநிலத் தலைவராக நியமித்து உள்ளது. வரவேற்கத் தக்கது.
பாரதீய ஜனதா பார்ப்பனர்கள் ஆதிக்கத்தில் உள்ள கட்சி என்று சிலர் குற்றச்சாட்டு சொல்கிறார்கள். அவர்கள் இந்து கொள்கையின் மீது நம்பிக்கை உள்ளவர்கள். ஆனால் அந்த அரசியலில் மதகத்தை திணிப்பது இல்லை என்ற அக்கட்சி பிரமுகர் ஒருவர் கூறுகிறார். இதற்கு பல்வேறு எடுத்துக் காட்டுகளை சொல்லலாம். அக்கட்சியின் பிரதமரே பிராமணர் அல்ல. ஜனாதிபதி உள்பட பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர்கள் பிராமணர்கள் அல்ல என்றும் விளக்கம் கொடுக்கிறார்.
அப்துல்காலாமை ஜனாதி பதி ஆக்கி அழகு பார்த்த பாரதீய ஜனதா இன்று தலித் இனத்தைச் சேர்ந்த ஒருவரை உயர்பதவியான ஜனாதிபதியாக ஆக்கி உள்ளது.
தற்போது தமிழகத்திலும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான் மாநிலத் தலைவர் என்கிறர் அவர்.
மேலும் மற்றக் கட்சியினர் இப்படி தலித் சமுத்தாயத்தைச் சேர்ந்தவரை உயர் பதிவியில் அமர வைத்திருக்கிறாாகளா என்று கேள்வி எழுப்புகிறார்.
இது ஒருபுறம் இருக்க… தமிழகத்தில் பாரதீய ஜனதாவை வளர்க்க அவர் எடுக்கும் முயற்சி எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பொதுவாக தமிழிசை சவுந்தரராஜன் மாநில தலைவராக இருந்தபோதுதான் அடிக்கடி பேட்டி கொடுத்து எதிர்க் கட்சிகளில் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துவந்தார்.
அதேபோல் எச். ராஜா … பல்வேறு விமசர்சன்திற்கு அவர் ஆளானாலும், அக்கட்சியினால் வரவேற்க கூடியவர். அதுவும் கட்சியை ஒருவிதத்தில் வளர்க்க உதவும். மேலும் வானதி சீனிவாசன் போன்றோரையும் குறை சொல்ல முடியாது.
அந்த வகையில் தற்போது முருகனும் செயல்பட வேண்டும் என்று அக்கட்சியினர் விரும்புகிறார்கள்.
அது மட்டும்போதாது. மக்கள் மனதில் அக்கட்சி இடம் பிடிக்க வேண்டும் என்றால்… நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இவர்தான் முதல்-அமைச்சர் என்பதை பறைசாற்ற வேண்டும். அவர் வல்லவராக, நல்லவராக இருக்க வேண்டும். கட்சி தோல்வியை தழுவினாலும், தொடர்ந்து அவரையே முன்னிருத்த வேண்டும். அப்படியானால்தான் மக்கள் மனதில் அவர் இடம் பிடிப்பார். எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகதாதவர் முதல்வராக வந்தால் என்ன என்று மக்கள் நினைக்க ஆரம்பிப்பார்கள். இதுபோன்ற நடவடிக்கையில் பாரதீய ஜனதா மட்டுமல்ல தேசிய கட்சிகள் இறங்க வேண்டும். அற்ப சீட்டுக்கு பிற கட்சிகளின் உதவியை நாடினால் ஒருக்காலமும் அக்கட்சிகள் வளராது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.