பள்ளி, கல்லூரிகளுக்கு 31 வரை விடுமுறை -ஊர்வலம் பொதுக்கூட்டங்களுக்கு தடை
1 min read
16.3.2020
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பள்ளிகள் , கல்வி நிறுவனங்கள் , நீச்சல் குளங்கள், மால்கள் போன்றவற்றை மார்ச் 31ம் தேதி வரை மூட வேண்டும் – மத்திய அரசு அறிவிப்பு.
கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த யோசனைகள் இருந்தால் பகிருங்கள்; சிறந்த தீர்வு அளிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு – பிரதமர் மோடி அறிவிப்பு.
10, +2 அரசுத்தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.மருத்துவ மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் மட்டும் தொடர்ந்து இயங்கும் – தமிழக முதல்வர் பழனிசாமி.
சுற்றுலா பயணிகள் தங்குமிடத்தை மார்ச் 31 வரை மூட வேண்டும் முன்பதிவு செய்யக்கூடாது,அனைத்து அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும் – தமிழக அரசு.
ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் போன்றவைகளுக்கு மார்ச் 31 வரை அனுமதி இல்லை – தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு.
அனைத்து கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள்,பணியாளர்கள் பணிக்கு வர வேண்டும் : உயர்கல்வித்துறை
பல்கலை. தேர்வுகள், செய்முறைத்தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் – உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் கல்லூரிகள், பல்கலை.,பயிற்சி மையங்களுக்கு அறிவுறுத்தல்.
கொரோனா குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை : இந்திய தண்டனைச் சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டம், பிற சட்டங்களின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – தமிழக முதல்வர் பழனிசாமி.
பேருந்து , ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தை மிகக் குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்.
அங்கன்வாடி மையங்களை மார்ச் 31 வரை மூட உத்தரவு : அங்கன்வாடி மையங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை குடும்பத்தினரிடம் வழங்க உத்தரவு – தமிழக அரசு.
ஐரோப்பிய நாடுகள், துருக்கி, இங்கிலாந்தில் இருந்து பயணிகள் இந்தியா வர மார்ச் 18 முதல் தடை : ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமன், குவைத்தில் இருந்து வந்தால் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவர் – மத்திய அரசு.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு எதிரொலியால் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 144 தடை உத்தரவு : புனேவில் 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மகாராஷ்டிர அரசு நடவடிக்கை.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்வு.
கொரோனா எதிரொலி : தமிழகத்தில் அனைத்து படப்பிடிப்புகளும் வரும் 19ம் தேதி முதல் ரத்து – ஃபெப்சி.
ஏற்கனவே 2 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திருவாரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் மேலும் ஒருவர் அனுமதி.
டாஸ்மாக் பணியாளர்களுக்கு முகக்கவசம், சானிடைசர் உடனே வழங்க வேண்டும்.டாஸ்மாக் மதுக்கடைகள், மதுக்கூடங்களில் கை சுத்திகரிப்பான் வைக்கவும், அங்கு வரும் நுகர்வோர் அதை பயன்படுத்தவும் உத்தரவு – தமிழக அரசு சுற்றறிக்கை.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 115 ஆக அதிகரிப்பு – மத்திய சுகாதாரத்துறை.