எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்; இந்தியா பதிலடி
1 min read
Pakistan infringement on border; India retaliates
17—/3/-2020
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
பங்கரவாதிகள் ஊடுருவல்
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. அங்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க இந்த நடவடிக்டிகை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இதன்காரணமாக அந்த மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் வெகுவாக குறைந்து உள்ளது. ஆனாலும் மாநிலத்தில் பதுங்கி உள்ள ஒருசில பயங்கரவாதிகளை கண்டுபிடித்து அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சில இடங்களில் துப்பாக்கி சண்டையும் நிகழ்ந்துள்ளது.
தாக்குதல்
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ் ரத்து செய்யப்பட்ட நாளில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் பூஞ்ச் மாவட்டத்தின்மான்கோடே மற்றும் மெந்தார் பகுதிகளில் இந்திய நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை அத்துமீறி தாக்குதல் நடத்தினா். சிறியரக ஆயுதங்கள், பீரங்கி குண்டுகள் ஆகியவை கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
அதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டது.
இந்த மோதலில் இந்திய ராணுவம் தரப்பில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. ஆனால் இதன் காரணமாக எல்லைப்பகுதியில் சிறிது பதற்றம் நிலவுகிறது.
