July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் உணவுகள்!

1 min read
Foods That Increase Immunity!

இப்போது, ஒவ்வொருவரும் நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கிக்கொள்ளும் காலத்தில் இருக்கிறோம். அதனால், முடிந்தவரை கீழே குறிப்பிட்ட உணவுகளில் ஒரு நாளை ஒன்றிரண்டாவது எடுத்துக்கொள்ளுங்கள.

பூண்டு
பூண்டு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும், காதல் உணர்வைத் தூண்டவும் செய்யும் அருமையான குணங்களைக் கொண்டுள்ளது. எதிர்ப்பு சக்தியைப் பொறுத்த விஷயத்தில் பூண்டின் பங்கு மிகவும் அருமையானது. இதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் பாக்டீரியாக்களையும், தொற்றுக்களையும் கொல்லவல்லது.

இஞ்சி
நுண்ணுயிர்களுக்கு எதிராகப் போராடும் சக்தி இஞ்சிக்கு உண்டு. இதில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் எனப்படும் உடலை காக்கும் பொருள் நிறைந்துள்ளது.

தயிர்
தயிரில் உடலுக்கு நல்லது செய்யும் நுண்ணுயிர்கள் நிறைந்துள்ளன. இந்த நல்ல நுண்ணுயிர்கள் செரிமான உறுப்புகளை குறிப்பாக குடற்பகுதியை நல்ல நிலையில் வைக்க உதவுகின்றன. ஆரோக்கியமன செரிமான மண்டலம் ஒரு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை உறுதி செய்யும்.

பார்லி, ஓட்ஸ்
பார்லியும் ஓட்ஸும் ஒரு முக்கியமான நார்ச்சத்தான பீட்டா&க்ளூக்கன் எனப்படும் நுண்ணுயிர் கொல்லும் மற்றும் உடலைக் காக்கும் குணங்களைக் கொண்ட பொருளைக் கொண்டுள்ளன. இவை மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.

சர்க்கரைவள்ளி கிழங்கு
பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படும் இந்தக் கிழங்கு இணைப்புத் திசுக்களின் உற்பத்திக்கு உதவும் வைட்டமின் ஏ சத்தை அதிகம் கொண்டுள்ளது. சர்க்கரைவள்ளிக் கிழங்கு உடல் சருமத்தை தொற்று மற்றும் நுண்ணுயிர் தாக்குதலில் இருந்து காக்கிறது. உங்கள் சருமம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

காளான்
உடலில் நோய்களோடு போராடும் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான ரத்த அணுக்கள் வளர்ச்சிக்கு காளான்கள் உதவுகின்றன. காளான்கள் துத்தநாகம் எனப்படும் ஜிங்க் சத்து மற்றும் பிற ஆரோக்கியம் தொடர்பான பல நன்மைகளையும் கொண்டுள்ளன.

பழங்கள்
நோய் எதிர்ப்பு சக்தியை தருவதில் பழங்கள் முதலிடத்தில் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. இவற்றில் வைட்டமின் பி1, சி, ஏ மற்றும் உலோகச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், உலகிலேயே மிக ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக உள்ளது. இது மேலும் உணவுப்பாதையை இயற்கையாகவே சுத்திகரிக்க வல்லது.

பெர்ரி பழங்கள்
பெர்ரி பழங்கள் இல்லாமல் சத்தான உணவு. ப்ளூபெர்ரி மற்றும் ராஸ்ப்பெர்ரிப் பழங்கள், உடலைக் காக்கும் பண்புகளைக் கொண்டுள்ளதோடு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே வலுப்பெறச் செய்கிறது. ப்ளூபெர்ரிப் பழங்கள் மற்ற பழங்களைக் காட்டிலும் குறைந்த சர்க்கரை அளவை கொண்டுள்ளதால், இவை ஆரோக்கியமானவையாக உள்ளன. இதில் அதிகம் உள்ள க்ளூட்டாமின் அமினோ அமிலங்களுக்கு நன்மை பயப்பதோடு, உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளையும் கொண்டது. பெர்ரி பழங்கள் இல்லாமல் சத்தான உணவு. ப்ளூபெர்ரி மற்றும் ராஸ்ப்பெர்ரிப் பழங்கள், உடலைக் காக்கும் பண்புகளைக் கொண்டுள்ளதோடு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே வலுப்பெறச் செய்கிறது. ப்ளூபெர்ரிப் பழங்கள் மற்ற பழங்களைக் காட்டிலும் குறைந்த சர்க்கரை அளவை கொண்டுள்ளதால், இவை ஆரோக்கியமானவையாக உள்ளன. இதில் அதிகம் உள்ள க்ளூட்டாமின் அமினோ அமிலங்களுக்கு நன்மை பயப்பதோடு, உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளையும் கொண்டது.

எலுமிச்சை
எலுமிச்சையில் அதிக அளவு வைட்டமின் சி சத்து காணப்படுகிறது. இதில் காணப்படும் பிற சத்துக்களும் இணைந்து நோய் எதிர்ப்பு சக்திக்கு உந்துதலை அளிக்கிறது.

கீரைகள், காய்கறிகள்
பச்சை நிறக் கீரைகள் மற்றும் காய்கறிகள், வைட்டமின் பி1, ஏ மற்றும் சி சத்துக்களைக் அதிகம் கொண்டவை. இவற்றில் துத்தநாகச் சத்தும் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில், இந்த பச்சைக் காய்கறி மற்றும் கீரைகள் ஒரு சிறந்த உணவாகத் திகழ்கின்றன. இந்த உணவுகளை தவறாமல் உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொண்டால் நோய்களை அண்ட விடாமல் நமது உடலை பாதுகாத்து கொள்ளலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.