June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

கொரோனாவால் சீனாவில் கடுமையான உற்பத்தி பாதிப்பு

1 min read
Seithi Saral featured Image


Severe production impact in China by Corona

18/4/2020

கொரோனா பரவல் காரணமாக சீனாவில் கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத வகையில் உற்பத்தி விகிதம் குறைந்து விட்டது.

கொரோனா

சீனாவில்தான் முதன்முதலில் கொரோனா பாதிப்பு தொடங்கியது. இன்று அங்கு கட்டுப்பட்ட நிலையில் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது- ஆனாலும் சீனாவில் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து உள்ளது.

கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவில் சீனாவின் உள்நாட்டு உற்பத்தி விகிதம் கடுமையாக சரிந்துள்ளது.

ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் சீனாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.8 சதவீதம் சரிந்துள்ளது. இது கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவிலான சரிவு ஆகும்.

கடந்த 20 ஆண்டுகளாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 9 சதவீதம் அளவில் இருந்தது.

தற்போது தொழில் நிறுவனங்கள் முற்றிலும் முடக்கத்தைச் சந்தித்துள்ள நிலையில் அதன் உள்நாட்டு வளர்ச்சி கடுமையாகச் சரிந்துள்ளது.

ஜனவரி முதல் மார்ச் வரையிலான சீனாவின் நடப்பு நிதி ஆண்டின் முதலாம் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி, முந்தைய நிதி ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 6.8 சதவீதம் சரிந்துள்ளது.

பதற்றம்

பொருளாதார அளவில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக திகழ்ந்து வரும் சீனாவின் வளர்ச்சி பெரும் சரிவுக்கு உள்ளாகியிருப்பது, பிற நாடுகளிடையே கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.