நடிகையிடம் தவறாக நடந்து கொண்ட காமெடி நடிகர் -திட்டி தீர்த்ததாக பேட்டி
1 min read
நடிகை பிரகதி
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பிரகதி. பாக்யராஜ் இயக்கிய வீட்ல விசேஷங்க படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான பிரகதி, அதனைத் தொடர்ந்து விஜயகாந்த், பாண்டியராஜன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார்.
தற்போது கூட பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் தமிழ் தெலுங்கு சினிமாவில் பல நடிகர்களுக்கும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரகதியிடம் முன்னணி மூத்த நகைச்சுவை நடிகர் ஒருவர் தவறாக நடந்து கொண்டார் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி கொடுத்த பிரகதி, ஒரு படத்தில் பணியாற்றும் போது மூத்த நகைச்சுவை நடிகர் ஒருவர் ஒரு காட்சி படமாக்கப்படும்போது, தன்னிடம் தவறான எண்ணத்தில் கை வைத்ததாகவும், நாளுக்கு நாள் அவரது பேச்சு பார்வை அனைத்துமே தவறாக இருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவரை கேரவனுக்குள் கூப்பிட்டு திட்டி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். சமுதாயத்தில் மிகப்பெரிய மரியாதை வைத்துள்ள நீங்கள் இந்த மாதிரி சில்லறைத்தனமான காரியங்களில் ஈடுபடுவது சரி இல்லை எனவும், பொது இடத்தில் வைத்து பேசினால் உங்களுக்கு தான் அவமானம் எனவும் திட்டி விட்டதாக அவர் கூறியுள்ளார்.
இந்த செய்தி தெலுங்கு சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது முன்னணியில் இருக்கும் தெலுங்கு காமெடி நடிகர்களில் பலர் மூத்த நடிகர்கள் தான் என்பதால் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.