சந்திரமுகி 2 பட சம்பளம்.. சந்திரமுகியாகவே மாறிய ஜோதிகா
1 min read
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்கும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. ஆனால் இதுவரை இரண்டாம் பாகமாக வெளிவந்த எந்த படமும் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை என்பதே சோகமான உள்ளது.
இருந்தாலும் அதையெல்லாம் மாற்றும் விதமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருந்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை ராகவா லாரன்சை வைத்து இயக்க முடிவு செய்திருக்கிறார் இயக்குனர் பி வாசு.
முதல் பாகத்தில் வேட்டையன் ஆக ரஜினிகாந்தும், சந்திரமுகியாக ஜோதிகாவும் போட்டி போட்டு நடித்து படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்கள். தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் வேட்டையன் ஆக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார்.
அதேசமயம் ஜோதிகாவும் தற்போது சினிமாவில் இருப்பதால் சந்திரமுகி கதாபாத்திரத்திற்கு அவரையே தேர்வு செய்யலாம் என எண்ணி அவரிடம் வாய்ப்பு கேட்டு சென்றுள்ளனர். ஆனால் ஜோதிகாவின் சம்பளம் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
ஜோதிகா மீண்டும் சினிமாவில் நடித்தாலும் அவரது மார்க்கெட் கோடிகளில் சம்பளம் கொடுக்கும் அளவுக்கு மார்க்கெட் பெரிதாக இல்லை என்பதால் படக்குழுவினர் யோசித்து வருகிறார்களாம். படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தின் தரத்திற்காக எவ்வளவு கோடி வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக இருப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
மேலும் முதல் பாகத்தில் ஜோதிகா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் தற்போது அடுத்த பாகத்திலும் அவரை எதிர் பார்க்கலாம் என்கிறார்கள் அவரை சுற்றிய வட்டாரங்கள். இருந்தும் இளம் நடிகையாக இருந்தால் படத்திற்கு எதிர்பார்ப்பு இன்னும் கூடும் எனவும் படக்குழுவினர் யோசித்து வருகின்றனர்.
சமீபத்தில் கூட சந்திரமுகி2 படத்தின் கதை லீக்காகி பெரும் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. சீக்கிரம் ஏதாவது முடிவு பண்ணுங்க பா.!