இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 1,981 பேர் பலி
1 min read
1,981 people killed so far in India
9-5-2020
இந்தியாவில் இதுவரை(9-ந் தேதி காலை வரை) கொரோனாவுக்கு 1981 பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இங்கு கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா தாக்கம் பற்றி மத்திய சுகாதாரத்துறை தினமும் தகவல் தெரிவித்து வருகிறது. இன்று (சனிக்கிழமை) காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியதாவது:-
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 56,342 ஆக இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 3,320 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 59,662 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று வரை 1,886 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 95 பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,981 ஆக உயர்ந்துள்ளது.
கெரோனா பாதிப்பில் இருந்து நேற்று வரை16,540 பேர் குணம் அடைந்திருந்தனர். ஆனால் இன்று வரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 17,847 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலம் வாரியாக…
நேற்று வரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை மாநிலம் வாரியாக கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. அடைப்புக் குறிக்குள் அந்த மாநிலத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது.)
மராட்டிம் – 19,063 ( 731)
குஜராத் – 7,412 ( 449)
டெல்லி – 6,318 ( 68)
தமிழ்நாடு – 6,009 ( 40)
ராஜஸ்தான் – 3,579 ( 101)
மத்திய பிரதேசம் – 3,341 ( 200)
உத்தர பிரதேசம் – 3,214 (66)
ஆந்திரா – 1,887 ( 41)
பஞ்சாப் – 1,731 ( 29)
மேற்கு வங்கம் -1,678 (60)
தெலுங்கானா – 1,133 (29)
காஷ்மீர் – 823 – (9)
கர்நாடகா – 753 (30)
அரியானா – 647 ( 8)
பீகார் – 571 (5)
கேரளா -503 ( 4)
ஒடிசா – 271( 2)
சண்டிகர் – 150 (1)
ஜார்க்கண்ட் – 132 (3)
திரிபுரா- 118 (0)
உத்தரகாண்ட் – 63 (1)
அசாம் – 59 (1)
சத்தீஸ்கர் – 59 (0)
இமாச்சல பிரதேசம் – 50 (2)
லடாக் – 42 (0)
அந்தமான் – 33 (0)
மேகாலயா- 12 ( 1)
புதுச்சேரி- 10 (0)
கோவா- 7 (0)
மணிப்பூர் – 2 (0)
தாதர் நாகர் ஹவேலி-1 (0)
அருணாச்சல பிரதேசம் – 1 (0)
மிசோரம் – 1 (0)
மேற்கண்ட தகவலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது.