சென்னையில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் சாவு
1 min read
2 more people die in Corona in Chennai
9-5-2020
சென்னையில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் இறந்துள்ளனர். இதனால் சாவு எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தற்போது சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை மையமாக கொண்டு அந்த வைரஸ் தமிழகம் முழுவதும் பரவி வருகிறது.
நேற்று(வெள்ளிக்கிழமை) வரை 6009 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. சென்னையில் மட்டும் 3043 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கொரோனாவுக்கு தமிழகம் முழுவதும் நேற்று வரை மொத்தம் 40 பேர் பலியாகியிருந்தனர்.
இந்தநிலையில், கொரோனா பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 64 வயது மூதாட்டி ஒருவரும், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று 56 வயது பெண் ஒருவரும் இன்று இறந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 42 ஆக உயர்ந்துள்ளது.