தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா உறுதி
1 min read
Corona confirmed to 526 people in one day
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா உறுதி
9-5-2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
உலகம் முழுவதும் பயமுறுத்தி வரும் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்துதான் பலருக்கு பரவி வருகிறது.
நேற்றைய(வெள்ளிக்கிழமை) நிலவரப்படி தமிழகத்தில் 6,009 பேருக்கு வைரஸ் தொற்று பரவி இருந்தது. இவர்களில் 1,605 பேர் குணமடைந்துவிட்டனர். நேற்று வரை கொரோனாவுக்கு 40 பேர் பலியாகி இருந்தனர்.
இன்று (சனிக்கிழமை) தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்து மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 526 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6, 535 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 1,824 பேர் சிகிச்சைக்கு பின் பூரண குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
4 பேர் பலி
கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 4 பேர் இறந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட போலீசார்
தமிழகத்தில் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையை சேர்ந்த 128 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் 85 பேருக்கும், கோவையில் 7 போலீசாருக்கும், திருவள்ளூரில் 9 போலீசார், 3 தீயணைப்பு வீரர்களுக்கும், மதுரையில் 5 போலீசாருக்கும், ராமநாதபுரத்தில் 2 போலீசார் மற்றும் 3 தீயணைப்பு வீரர்களுக்கும், செங்கல்பட்டில் 4 போலீசாருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தற்போது வரை 107 போலீசாருக்கும், 21 தீயணைப்பு வீரர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,535 ஆக உள்ளது. மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வருமாறு:-
மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:-
சென்னை – 3,330
கடலூர் – 394
அரியலூர் – 271
செங்கல்பட்டு – 224
கோவை – 146
தருமபுரி – 4
திண்டுக்கல் – 108
ஈரோடு – 70
கள்ளக்குறிச்சி – 59
காஞ்சிபுரம் – 114
கன்னியாகுமரி – 24
கரூர் – 47
கிருஷ்ணகிரி – 10
மதுரை – 113
நாகப்பட்டினம் – 45
நாமக்கல் – 77
நீலகிரி – 14
பெரம்பலூர் – 95
புதுக்கோட்டை – 5
ராமநாதபுரம் – 25
ராணிப்பேட்டை – 60
சேலம் – 35
சிவகங்கை – 12
தென்காசி – 52
தஞ்சாவூர் – 66
தேனி – 56
திருப்பத்தூர் – 27
திருவள்ளூர் – 290
திருவண்ணாமலை – 82
திருவாரூர் – 32
தூத்துக்குடி – 30
திருநெல்வேலி – 80
திருப்பூர் – 114
திருச்சி – 65
வேலூர் – 29
விழுப்புரம் – 293
விருதுநகர் – 37