இம்மாத இறுதியில் தியேட்டர்கள் திறக்கப்படும்? கொரோனா இலவசம்
1 min read
9.5.2020
கொரானா ஊரடங்கு பிறப்பிக்கபடுவதற்கு முன்னரே தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் மற்றும் ஷாப்பிங் மால்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. மேலும் ஊரடங்கு முடிவடைந்தாலும் தியேட்டர்கள் திறக்க கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகும் என்ற நிலையில் பேசி வந்தனர்.
ஆனால் தற்போது திடீர் திருப்பமாக தியேட்டர்களை மே மாத இறுதியில் திறந்து கொள்ளலாம் என அரசு விரைவில் அறிவிக்கப் போவதாக செய்திகள் கிடைத்துள்ளது. இது தமிழக மக்களை பெரிதும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஏற்கனவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பின்பும் தமிழ்நாட்டில் இன்னும் கொரானா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு தான் இருக்கிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 500 பேராவது கொரானாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் கூடும் தியேட்டர்கள் மற்றும் வணிக வளாகங்களை திறந்தால் மக்கள் இன்னும் பெரிதாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக சமூக கருத்துக்கள் பரவி வருகின்றன. ஆனால் தொடர்ந்து அரசியல்வாதிகளை சினிமாவை சேர்ந்தவர்கள் படப்பிடிப்புகளை தொடங்க அனுமதி தருமாறு டார்ச்சர் செய்து வருவதையும் பார்க்க முடிகிறது.
கொஞ்சம் கொஞ்சமாக ஊரடங்கு தளர்த்தப் முடிவு செய்துள்ள அரசு முதல் கட்டமாக சினிமா தொழிலில் ஒரு சில தொழில் பிரிவுகளை பாதுகாப்புடன் தொடங்க அனுமதி கொடுத்துள்ளது. வணிக வளாகங்களிலும் குறிப்பிட்ட அளவு மக்கள் தொகையில் சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பான முறையில் தொடங்கலாம் எனவும் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது.
தியேட்டர்களில் மக்கள் கூட்டம் பொதுவாகவே அதிகமாக இருக்கும் என்பதால் இது இன்னும் எவ்வளவு பெரிய விளைவை ஏற்படுத்த போகிறதோ தெரியவில்லை என்று வலைதளங்களில் காரசாரமான விவாதங்கள் சென்று கொண்டிருக்கின்றன.