இந்தியாவில் கொரோனா சாவு 2,109 ஆக உயர்வு
1 min read
Corona death rises to 2,109 in India
10-5-2020
இந்தியாவில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 2,109 ஆக அதிகரித்து உள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு பற்றிய தகவல்களை தினமும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்து வருகிறது. அதன்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று கூறியதாவது:-
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று 59,662 ஆக இருந்தது. அது இன்று காலை 62,939 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு நேற்று வரை 1,981 பேர் இறந்து இருந்தனர். அது இன்று காலை 2,109 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்றுவரை 17,847 பேர் குணம் அடைந்து இருந்தனர். இன்று குZம் அடைந்தோர் எண்ணிக்கை 19,358 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 3,277 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மாநிலம் வாரியாக….
இன்று காலை நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயரிழந்தவர்களின் எண்ணிக்கையும் (அடைப்புக்குறிக்குள்) மாநிலம் வாரியாக வருமாறு:-
மராட்டியம் – 20,228 (779)
குஜராத் – 7,796 (472)
டெல்லி – 6,542 (73)
தமிழ்நாடு – 6,535 (44)
ராஜஸ்தான் – 3,708 (106)
மத்திய பிரதேசம் – 3,614 (215)
உத்தர பிரதேசம் – 3,373 (74)
ஆந்திரா – 1,930 (44)
மேற்கு வங்காளம் -1,786 (171)
பஞ்சாப் – 1,762 ( 31)
தெலுங்கானா – 1,163 (30)
காஷ்மீர் – 836 (9)
கர்நாடகா – 794 (30)
அரியானா – 675 (9)
பீகார் – 591 (5)
கேரளா -505 (4)
ஒடிசா – 294(2)
சண்டிகர் – 169 (2)
ஜார்க்கண்ட் – 156 (3)
திரிபுரா- 134 (0)
உத்தரகாண்ட் – 67(1)
அசாம் – 63 – (1)
சத்தீஸ்கர் – 59( 0)
இமாச்சல பிரதேசம் – 50 (2)
லடாக் – 42 ( 0)
அந்தமான் – 33 (0)
மேகாலயா- 13 (1)
புதுச்சேரி- 10 (0)
கோவா- 7 (0)
மணிப்பூர் – 2 (0)
தாதர் நாகர் ஹவேலி-1(0)
அருணாச்சல பிரதேசம் – 1 (0)
மிசோரம் – 1 (0)