சென்னையில் அடுத்த 6 நாட்களுக்கு கொரோனா தொற்று அதிகரிக்கும்; சிறப்பு அதிகாரி தகவல்
1 min read
Coronavirus to increase for next 6 days in Chennai Special Officer Information
10-5-2020
சென்னையில் இன்னும் 6 நாட்களுக்கு கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் என்று சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னையில் கொரோனா
சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து அதிகமாக பரவி வருகிறது.
தமிழகத்தில் 6,535 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.45 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில், சென்னையில் தான் அதிக கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. 3,330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 501 பேர் குணமடைய, 2,786 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், ராயபுரம் மண்டலத்தில் 571 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 563 பேரும், திரு.வி.க., நகரில் 519 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இந்த மண்டலங்கள் கருஞ்சிவப்பு மண்டலத்திற்கு மாறியுள்ளன.
சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை வருமாறு:-
- திருவொற்றியூர் – 64
- மணலி – 27
- மாதவரம்- 46
- தண்டையார் பேட்டை- 231
- ராயபுரம்- 571
- திரு.வி.க. நகர்- 519
- அம்பத்தூர்- 167
- அண்ணாநகர்-248
9 தேனாம்பேட்டை-360 - கோடம்பாக்கம்-563
- வளசரவாக்கம் – 274
- ஆலந்தூர்- 25
- அடையாறு- 159
- பெருங்குடி- 35
15.சோழிங்நல்லூர்- 25
கொரோனா அதிகரிக்கும்
இதனிடையே, சென்னையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கொரோனா பரவல் குறித்து கூறியதாவது:-
சென்னையில் கோயம்பேடு மூலம் கொரோனா பாதிப்புக்குள்ளாவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில், மாஸ்க் அணிவது பழக்கமாக்கி கொள்ள வேண்டும். அறிகுறி இல்லாமல் கொரோனா வருவது நல்ல செய்தி. சென்னையில் அடுத்த 6 நாட்களுக்கு மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வாக இருக்கும். இதனால் மக்கள் அச்சப்பட வேண்டாம். கண்ணுக்கு தெரியாத கிருமிக்கு எதிரான போரில், மக்கள் சிப்பாய்கள் போல் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
42 பேருக்கு கொரோனா
இதற்கிடையே கோயம்பேடு பகுதியை சேர்ந்த 42 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 5 பேர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கோயம்பேடு மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது.