July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழக அரசு நாளை திறக்க அனுமதி அளித்துள்ள கடைகள் விவரம்

1 min read

Details of stores that have been approved by the Government of Tamil Nadu

10-5-2020

ஊரடங்கையொட்டி அடைக்கப்பட்ட கடைகளில் 34 கடைகளை நாளை முதல் திறக்க தமழக அரசு அனுமதி அளித்துள்ளது.

ஊரடங்கு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறபிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. காய்கறி கடைகள் மற்றும் மளிக்கை கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
தற்போது நீட்டிக்கப்பட்ட ஊடரடங்கு வருகிற 17-ந் தேதி வரை உள்ளது. ஆனால் தற்போதே படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் 34 கடைகளை நாளை (திங்கட்கிழமை) முதல் திறக்க தமிழக அரசு ஆனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர நாளை (திங்கட்கிழமை)) முதல் பல செயல்பாடுகள் மற்றும் பணிகள் குறிப்பிடப்பட்ட நேரத்தில் செயல்பட நேற்று அறிவிப்பு வெளியான நிலையில், அதில் பிற தனிக்கடைகள் பிரிவில் மேலும் சில கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

அனுமதியளிக்கப்படும் தனிக்கடைகள் வருமாறு:-

டீக்கடைகள்

  • டீக்கடைகள் (பார்சல் மட்டும்)
  • பேக்கரிகள் (பார்சல் மட்டும்)
  • உணவகங்கள் (பார்சல் மட்டும்)
  • பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள்
  • கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள்
  • சிமெண்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகள்
  • மின் சாதனப் பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்

போன் கடைகள்

  • மொபைல் போன் விற்கும் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
  • கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்
  • வீட்டு உபயோக இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள்
  • மோட்டார் இயந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
  • கண் கண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள்
  • குளிர் சாதன வசதி இல்லாத சிறிய நகைக் கடைகள்
  • குளிர்சாதன வசதி இல்லாத சிறிய ஜவுளிக் கடைகள் ( ஊரக பகுதிகளில் மட்டும்)
  • மிக்ஸி, கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள்
  • டிவி விற்பனை மற்றும் டிவி பழுது நீக்கும் கடைகள்
  • பெட்டி கடைகள்
  • பர்னிச்சர் கடைகள்
  • சாலையோர தள்ளுவண்டி கடைகள்
  • உலர் சலவையகங்கள்
  • கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ்
  • லாரி புக்கிங் சர்வீஸ்
  • ஜெராக்ஸ் கடைகள்
  • இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள்
  • இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் கடைகள்
  • நாட்டு மருந்து விற்பனை கடைகள்
  • விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகள்
  • டைல்ஸ் கடைகள்
  • பெயிண்ட் கடைகள்
  • எலக்ட்ரிகல் கடைகள்
  • ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் விற்பனை கடைகள்
  • நர்சரி கார்டன்கள்
  • மரக்கடைகள் மற்றும் பிளைவுட் கடைகள்
  • மரம் அறுக்கும் கடைகள்

சலூன் கடைகளுக்கு அனுமதி இல்லை

சலூன்கள், ஸ்பா மற்றும் பியூட்டி பார்லர்கள் இயங்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய்த் தொற்று தன்மையைப் பொறுத்து வருங்காலங்களில் பல்வேறு பணிகளுக்கு / கடைகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்படும். மேற்குறிப்பிட்ட கடைகளின் உரிமையாளர்கள், குளிர்சாதன வசதி இருந்தால் அதை இயக்காமல், வாடிக்கையாளர்களிடம் தனிநபர் இடைவெளியினை பின்பற்ற அறிவுறுத்துவதோடு, கிருமிநாசினிகள் பயன்படுத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.