July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

பிரபல நடிகரை நம்பி ஏமாந்த நடிகை கண்ணீர்

1 min read
Believing the actor is a disappointing actress

அக்கட தேச நடிகருக்கும் நம்ம ஊரு நாயகிக்கும் ரொம்ப நாட்களாகவே பழக்கம் இருந்து வந்தது அனைவரும் அறிந்ததே. இருவரும் காதலித்ததாக ஊரே சொன்னாலும் அது உண்மை இல்லை எனக் கூறி ஊர் சுற்றி வந்தது தெரிந்த விஷயம்தான்.

அந்த நடிகருக்காக தனக்கு நடக்க இருந்த திருமணத்தை கூட ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி நிறுத்தி விட்டாராம் அந்த நாயகி. அதுமட்டுமல்லாமல் சமீபகாலமாக நாயகிக்கு எந்த ஒரு படமும் சரியாக போகவில்லை என்பதால் அந்த நடிகரை திருமணம் செய்து கொள்ளலாம் என கணக்கு போட்டாராம்.

ஆனால் அந்த நடிகரும் இந்த நாயகியை யூஸ் பண்ணும் அளவுக்கு யூஸ் பண்ணி விட்டு, பார்ட்டி, லிவிங் டு கெதர் என அநியாயத்திற்கு நடிகையை அனுபவித்து விட்டு தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகிறாராம்.

இதனால் மனமுடைந்த அந்தநாயகி அந்த கல்யாணத்தை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்ற மனநிலையில் சுற்றுவதாக செய்திகள் கிடைத்துள்ளது. நடிகரும் தன்னுடைய வசதிக்கேற்ப பெரிய தொழிலதிபர் மகளைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறாராம்.

அவரையே நம்பி அவர் சொன்ன அனைத்துக்கும் தலையாட்டி இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்றுவந்த அந்த நடிகையை தற்போது ஏறெடுத்து கூட பார்க்க மாட்டேன் என்கிறாராம். காலம் போன காலத்தில் செட்டில் ஆகிவிடலாம் என கணக்குப் போட்ட நாயகியை தவிக்கவிட்ட அந்த நடிகரின் மீது தற்போது செம காண்டில் இருக்கிறாராம் அந்த நாயகி.

ஆனால் அந்த நடிகர் செமையான பிளேபாய் என்பது தற்போது தான் தெரிய வந்ததாம் அந்த நாயகிக்கு. இப்படி இருப்பார்னு நான் நெனைக்கவே இல்லை என நீலிக்கண்ணீர் வடிக்கிறாராம் அந்த நடிகை. ஆனால் கோலிவுட் வட்டாரத்திலோ ஊசி இடம் கொடுக்காமல் எப்படி நூல் உள்ளே செல்லமுடியும் என நடிகையை திருப்பி கேட்க பேச்சு மூச்சு இல்லாமல் அடங்கிப் போய் விட்டாராம் அந்த நடிகை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.