இந்தியாவில் ஒரே நாளில் 3525 பேருக்கு கொரோனா உறுதி
1 min read
Coronation affects 3525 people in one day in India
3-5-2020
இந்தியாவில் ஒரே நாளில் 3525 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா
உலக நாடுகளை பெரும்பாதிப்புக்குள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்பட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. எனினும் பரிசோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
3525 பேருக்கு உறுதி]
மத்திய சுகாதாரத்துறை இன்று(புதன்கிழமை) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம் 74,281 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3525 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 122 பேர் உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்கள்
இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2415 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 24386 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பில் மராட்டிய மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் மொத்தம் 24427 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 921 பேர் பலியாகி உள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் இதுவரை 8903 பேருக்கும், அதனை அடுத்து தமிழகத்தில் தமிழகத்தில் 8718 பேருக்கும், டெல்லியில் 7639 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 3986 பேருக்கும், ராஜஸ்தானில் 4126 பேருக்கும், உத்தர பிரதேசத்தில் 3664 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.