பிரபல தயாரிப்பாளரிடம் வம்பு வளர்த்த நடிகை -ஓரம் கட்டுவதால் அதிர்ச்சி
1 min read
கன்னட சினிமாவில் அறிமுகமாகி தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் அந்த பிரபல நடிகை. தமிழில் இவர் நடித்துள்ள படம் ரிலீஸ் ஆகவில்லை.
ஆனால் அதற்குள்ளே பிரபல தயாரிப்பாளர் ஒருவரிடம் வம்பு வளர்த்து கொண்டாராம் அந்த நாயகி. பிரபல தயாரிப்பாளர் ஒருவர் பெரிய நடிகர் படம் ஒன்றில் நடிக்க கேட்க, நடிகை கோடிகளில் சம்பளம் கேட்டுள்ளார்.
இன்னும் முழுசா 4 படம் கூட நடிக்கவில்லை அதுக்குள்ள உனக்கு இவ்வளவு பணம் வேணுமா என தயாரிப்பாளர் கேட்க, உங்களுக்கு இஷ்டம்னா கொடுங்க, இல்லேன்னா கிளம்புங்க என சொல்லி விட்டாராம். அதன் பிறகுதான் தெரிய வந்ததாம் சினிமாவில் உள்ள அனைத்து பெரிய நடிகர்களை வைத்து தொடர்ந்து பெரிய படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் என்று.
அதன் தயாரிப்பாளரும் இனி நீ எப்படி சினிமாவில் இருக்கிற என நான் பார்க்கிறேன் என சவால் விட்டுவிட்டு சென்று விட்டாராம். பெரிய நடிகர்களுடன் நடிக்கிறநால தானா நீ எவ்வளவு சம்பளம் கேட்கிற என அதற்கும் வேட்டு வைத்தார். தற்போது குறத்தி போல் அடங்கியுள்ள ஹீரோயின் பெரிய நடிகர்களின் பட வாய்ப்பை கைப்பற்ற வேறொரு வழியை கையாளுகிறாராம்.
அதாவது வேண்டுமென்றே நடிகர்களிடம் சென்று வழிய பேசி நட்பு கொள்கிறார். அதுமட்டுமல்லாமல் மீண்டும் அந்த தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்க பலமுறை சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தாராம். ஆனால் அந்த தயாரிப்பாளர் ஆடுற வரைக்கும் ஆடிக்கோ, இனி உனக்கு சினிமாவில் டண்டணக்காதான் என கூறிவிட்டாராம்.
எப்படியாவது கொரானாவுக்கு பிறகு பெரிய நடிகர்களின் பட வாய்ப்புகளை கைப்பற்றி சீக்கிரம் செட்டில் ஆகிவிடலாம் என ஐடியா போட்ட நாயகி கனவில் கல்லைத் தூக்கிப் போட்டாராம் அந்த தயாரிப்பாளர். கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டோமோ என கவலையில் உள்ளாராம் அந்த பிரபல நாயகி.