June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

சாதாரண மக்களின் வாழ்வாதாரத்திற்கு பொது போக்குவரத்து அவசியம்

1 min read


Public transport is essential for the livelihood of ordinary people

15-5-2020

சாதாரண மக்களின் வாழ்வாதாரத்திற்கு பொதுபோக்கு வரத்து அவசியம் என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.

ஊரடங்கு

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் வாகனபோக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இரண்டு முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பல்வேறு தொழிற்சாகைள், நிறுவனங்கள் இயங்க அனுமதி அளித்துள்ளது. மக்களின் வாழ்வாதாரத்திற்காக இப்படி ஊரடங்கு தளர்த்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 4-வது கட்டமாக ஊரடங்கு நீ்ட்டிக்கப்படும் என்றும்  அது வித்தியாசமாக இருக்கும் என்றும் பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். ரெயில் போக்குவரத்து இப்போதைக்கு இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் பஸ் போக்குவரத்தை நீட்டிப்பது பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை.

வாழ்வாதாரம்

மத்திய அரசு சிறு தொழில் நடத்துபவர்களுக்கும் சாலையோர வியாபாரிகளுக்கும் கடன் உதவி அளிக்க மத்திய அரசு முன்வந்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஆனால் இது மட்டும் மக்களின் வாழ்வாதாரத்துக்கு தீர்வு ஏற்படுத்தி விடாது.  தனி நபரின் வருமானத்துக்கு வழிகாண வேண்டும். வீட்டு வாடகை தர முடியாமலும், மளிகை பொருட்கள் வாங்க முடியாமலும் எத்தனையோ  லட்சம் குடும்பங்கள்  தவிக்கின்றன.

அன்றாடம் உழைத்து கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்துபவர்களின் நிம்மதி போய் 51 நாட்கள்  கடந்து விட்டன. இந்த காலகட்டத்தில் உடனடி நிவாரணம் மட்டுமே வாழ்வாதாரம் பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும்.

எனவே தமிழக அரசு,   பொது மக்கள் சகஜ நிலைமைக்கு திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போக்குவரத்து

சிறு தொழில் தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் அந்த தொழில் செல்ல சாதாரண மக்கள் செல்ல பொது போக்குவரத்தும்  அவசியம். எனவே பஸ் போக்குரத்தும் சென்னை போன்ற நகரங்களில் ரெயில் போக்குவரத்தும் அவசியம். இதுதான் சாதாரண மக்களின் பல பிரச்சினைக்கு முடிவு கட்டும்.

எனவே தமிழக அரசு,  கட்டுபாடுகளுடன் பொது போக்குவரத்தை தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெரும்பாலானவர்கள் கருத்து ஆக உள்ளது.-திருப்பதி ராஜன், சென்னை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.