நெல்லை ரயில்வே எஸ்ஐ சஸ்பெண்ட்
1 min read
நெல்லை ரயில்வே எஸ்ஐ சஸ்பெண்ட்
எஸ்பி அதிரடி உத்தரவு
15.5.2020
நெல்லை சந்திப்பு ரயில்வே போலீஸ் (மொபைல்) எஸ்ஐயாக இருப்பவர் சரவணன் முருகன் (56). இவர் பெண் ஒருவரிடம் அபாசமாக பேசிய தகவல் வெளியானது. பாதிக்கப்பட்ட ஒருவர் அளித்த புகார் குறித்து மதுரை ரயில்வே டிஎஸ்பி இளங்கோ விசாரணை நடத்தினார். அதன் அறிக்கை திருச்சி ரயில்வே எஸ்பி செந்தில்குமாரிடம் அளிக்கப்பட்டது. அதில், புகாரில் உண்மை தன்மை இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் ரயில்வே எஸ்பி செந்தில்குமார், நெல்லை ரயில்வே போலீஸ் (மொபைல்) எஸ்ஐ சரவண முருகனை நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். திருச்சியிலுள்ள உயரதிகாரிகளிடம், எஸ்ஐ கிட் மற்றும் அவரது அடையாள அட்டையை ஒப்படைக்க வேண்டும். திருச்சியில் அவர் தங்கியிருக்க வேண்டும், வெளியூர் செல்ல வேண்டியிருந்தால் உயரதிகாரிகளிடம் அனுமதி கேட்டு செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.