சென்னையில் ஒரே நாளில் 482 பேருக்கு கொரோனா உறுதி
1 min read
Corona confirmed to 482 people today in Chennai
17-5-2020
சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் 482 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
செய்யப்பட்டுள்ளது.
சென்னையில்….
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உயர்ந்து வருகிறது.
அந்த வகையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை ) மட்டும் தமிழகத்தில் கொரோனாவால் 639 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இவர்களில் சென்னையில் மட்டும் 482 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
இதில் 480 பேர் சென்னையிலேயே இருப்பவர்கள. ஒருவர், ஆந்திராவில் இருந்தும் இன்னொருவர் கர்நாடகாவில் இருந்தும் வந்தவர்கள் ஆவர்.
இதன் மூலம் சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பு 6,750 ஆக அதிகரித்துள்ளது.
மற்ற மாவட்டங்களான செங்கல்பட்டில் 28 பேருக்கும், திருவள்ளூரில் 18 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு இருக்கிறது..
மதுரையில் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் மராட்டியத்தில் இருந்து வந்தவர்கள் 2 பேர், கர்நாடகாவில் இருந்து வந்த ஒருவரும் அடங்குவர்.
மாவட்டம் வாரியாக…
மாவட்டம் வாரியாக இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்கள் விவரம் வருமாறு:-
சென்னை-480
செங்கல்பட்டு-28
திருவள்ளூர்-18
மதுரை-10
காஞ்சிபுரம்-5
அரியலூர்-5
திருவண்ணாமலை-3
கள்ளக்குறிச்சி-3
கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் தலா-1
ரெயில்வேயில் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்-2
வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள்
மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்தவர்களில் கள்ளக்குறிச்சியல் 14, கரூரில் 16, தூத்துக்குடி-12, சேலம்-4, விருதுநகர்-4, சிவகங்கை-4, தென்காசி-3, மதுரை-2 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளது.
தெலுங்கானாவில் இருந்து சேலம் வந்தவர்களில் 3 பேருக்கும் ராஜஸ்தானில் இருந்து சேலம் வந்தவர்களில் 2 பேருக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
ஆந்திராவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
கர்நாடகாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கும், மதுரை வந்த ஒருவருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
ஆக இன்று மட்டும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 81 பேருக்கு கொரோன கண்டறியப்பட்டு இருக்கிறது.
இவர்களையும் சேர்த்து தமிழகத்தல் இன்று மட்டும் 639 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
வயது வாரியாக..
தமிழகத்தில் மொத்த பாதிப்பில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 663 பேர், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 9,749 பேர், 60 வயதை கடந்தவர்கள் 812 பேர் உள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று மட்டும் 4 பேர் இறந்துள்ளனர்.