இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது
1 min read
Corona impact in India has exceeded 1 lakh
19-5-2020
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை உள்ளது என்றாலும் சிற்சில தளர்வுகள் செய்யப்பட்டு உள்ளன, ஆனாலும் கொரோனா பரவல் என்னவோ அதிகரித்த வண்ணம்தான் உள்ளது. உயிரிழப்பும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கொரோனா பற்றிய தகவலை மத்திய சுகாதாரத்துறை தினமும் காலையில் வெளியிட்டு வருகிறது. அதேபோல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலையிலும் கொரோனா பாதிப்பு தகவலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டது.
1 லட்சத்தை தாண்டியது
அதன்படி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது. அதாவது மொத்தம் 1,01,139 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4970 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 134 பேர் இறந்துள்ளனர். இதவரை மொத்தம்
கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3163 ஆக உயர்ந்துள்ளது.
அதே நேரம் இதுவரை 39174 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து உள்ளனர். நேற்று(திங்கட்கிழமை) ஒரே நாளில் மட்டும் 2350 பேர் குணமடைந்துள்ளனர்.
மராட்டியம்
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளத மராட்டியம்தான். அங்கு அதிகபட்சமாக 35058 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த மாநிலத்த்தில் மட்டும் இதுவரை 1249 பேர் இறந்துள்ளனர். அதற்கு அடுத்து குஜராத்தில் 11745 பேருக்கும், தமிழகத்தில் 11760 பேருக்கும், டெல்லியில் 10054 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.