கடனை செலுத்த ரிசர்வ் வங்கி கால அவகாசம் வழங்கினாலும் கூடுதல் வட்டி வசூலிப்பதாக புகார்
1 min read
The Reserve Bank has given time to repay the loan but complains of additional interest
22-5-2020
வங்கி கடனை செலுத்த மேலும் 3 மாதகாலம் ரிசர்வங்கி அவகாசம் வழங்கி உள்ளது. ஆனாலும் வாடிக்கையாளர்கள் இதுபற்றி தங்கள் வங்கியில் ஆலோசனை பெறுவது நல்லது. பல வங்கிகளில் இந்த காலத்தில் கூடுதல் வட்டி போடுவதாக பலர் குற்றம் சாட்டுகிறார்கள்.
வங்கி கடன்
கொரோனா பரவல் காரணமாக இந்திய பொருளாதாரம் பெரும் அளவில் பாதிப்பு அடைந்துள்ளது.
தொழில்கள் பாதிப்பபு அடைந்துள்ளன. அதற்காக மத்திய அரசு பல்வேறு கடன்கனை அறிவித்து உள்ளது. நடைபாதை கடைகாரர்களுக்குகூட கடன் வழங்கப்படும் என்று மத்திய மந்திரி நிர்மாலா சீதாராமன் கூறியுள்ளர்.
வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த கால அவசாசத்தை ரிசர்வ் வங்கி அறிவித்து வருகிறது.மேற்போது மேலும் 3 மாத காலம் அவகாசம் அளித்து உள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) நிருபர்களிடம் கூறியதாவது:-
வரிவசூல்
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வரி வசூலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 17 சதவீதமாக ஆக குறைந்துள்ளது. உற்பத்தி நடவடிக்கைகள் 21 சதவீமாக குறைந்துள்ளது. முக்கிய தொழில் நிறுவனங்களின் உற்பத்தி 6.5 சதவீதம் அளவிற்கு சரிந்துள்ளது.
வேளாண் பணிகள் பாதிக்கப்பட்டிருக்கும் சமயத்திலும், உணவு தானிய உற்பத்தி 3.7 சதவீதம் அதிகரித்திருப்பது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. 2020-21ம் நிதி ஆண்டில் ஏப்ரல் 1 -ந் தேதி முதல் அந்நிய செலாவணி இருப்பு 9.2 பில்லியன் அதிகரித்துள்ளது. மே 15-ந தேதி வரை, அந்நிய செலாவணி இருப்பு 487 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
2020-21 ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி எதிர்மறையான அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, நிதியாண்டின் இரண்டாம் பாதியில் சில முன்னேற்றம் இருக்கும்.
தவணை செலுத்த அவகாசம்
வங்கிக்கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக 3 மாத அவகாசம் (ஆகஸ்டு 31-ந் தேதி வரை) வழங்கப்படுகிறது. மேலும் 3 மாதங்களுக்கு சிறு தொழில் கடன் வழங்கவும் ஏப்றாடுசெய்யப்பட்டுள்ளது. இதற்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் 4.40 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதேபோல் ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டதன்மூலம் வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்பு உள்ளது.
கூடுதல் வட்டி வசூலிப்பா?
வங்கியில் வாங்கிய கடன் தவணையை செலுத்த ரிசர்வ் வங்கி கால அவகாசம் வழங்கினாலும் வாடிக்கையாளர்கள் இதுபற்றி தங்கள் வங்கியில் தகுந்த ஆலோசனை பெறுவது நல்லது.
காரணம் வங்கிகளில் கடன் தவணை செலுத்தாதற்கு கூடுதல் வட்டி விதிக்கப்படுவதாக சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். அப்படி கூடுதல் வட்டி விதிக்கப்பட்டால் பாதிக்கப்படுவது கடன் வாங்கியவர்கள்தான். ஒட்டுமொத்தமாக வட்டி கூடினால் அவர்களால் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்படலாம்.
இப்படி கூடுதல் வட்டி வசூலிப்பது எந்த வங்கிகள் என்று சரியாக தெரியவில்லை. ஆனாலும் கடன் வாங்கியர்கள் அரசின் உத்தரவையோ, ஊடகங்களில் வரும் செய்தியையோ முழுமையாக நம்பி கடன் செலுத்தாமல் இருந்துவிட வேண்டாம். இதுபற்றி தங்கள் வங்கியில் தகுந்த ஆலோசனையை பெறுவது நல்லது. வங்கியில் விளக்கம் கேட்ட பின் உங்கள் விருப்பபடி செயல்படுங்கள்.