ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நடித்து மோசடி- நடிகைகளுடன் உல்லாசம்
1 min read
IAS. Cheating as an officer - flirtatious with actresses
1-6-2020
ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நடித்து அரசுவேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். அவர் மோசடி செய்த பணத்தைக் கொண்டு நடிகைகளுடன் உல்லாசமாக இருந்தார்.
அரசு வேலை
ராமநாதபுரத்தை சேர்ந்தவர் தனராஜ்(வயது 75) இவரது மனைவி டெய்சி(61). இவர்கள் இருவருமே ஆசிரியர்களாக வேலை செய்து பணி ஓய்வு பெற்றவர்கள்.
இவர்களது மகன் சைமன். ஆந்திராவில் ஒரு மெடிக்கல் காலேஜில் பேராசிரியாக வேலை பார்த்து வருகிறார்.
இவர்களது மகள் சைனி தூத்துக்குடி மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
சைனியின் கணவர் ஜூபல் என்பவருக்கு அரசு வேலை வாங்க டெய்சி முயற்சி செய்து வந்தார்.
இந்த நிலையில் சென்னையில் சுகாதாரத்துறையில் உதவியாளராக பணியாற்றும் ஜார்ஜ் பிலிப் என்பவரது அறிமுகம் டெய்சிக்கு கிடைத்துள்ளது.
டெய்சியிடம் ஜார்ஜ் பிலிப் தனக்கு, டி.என்.பி.எஸ்.சி,யில் வேலை பார்த்து வரும் நவாப்பன் மற்றும் சிலரை நன்றாக தெரியும் என்றும் அவர்கள் மூலமாக நிறைய பேருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளேன் என்றும் கூறியுள்ளார்.
ரூ.15 லட்சம்
இதை நம்பிய டெய்சி தன்னுடைய மருமகன், சகோதரியின் மகன் மற்றும் ஒரு உறவினர் என 3 பேருக்கு அரசு வேலை வாங்கி தர வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு ஜார்ஜ் ஒ ரு வேலைக்கு ரூ.5 லட்சம் வீதம் 3 பேருக்கும் 15 லட்சம் ரூபாய் வேண்டும் என்று கேட்டார்.
அதற்கு டெய்சி சம்மதித்துள்ளார். பணம் தரும்போது வேலைக்கான நியமன உத்தரவு தரப்படும் என்றும் அவர் கூறியுளார்.
இதன்படி டெய்சியும் ரூ.15 பணத்துடன் தயாராக இருந்தார். அப்போது, ஜார்ஜும், நவாப்பனும் ஒரு ஜீப்பில் அதிகாரிகள் போல வந்தனர். அவர்கள் வந்த ஜீப்பில் சிவப்பு சுழல் விளக்கு இருந்தது. இதனால் அவர்கள் உயர் அதிகாரிகள் தான் என்று டெய்சி நம்பினார். அவர்களிடம் பணத்தைக் கொடுத்து வேலைக்கான நியமன உத்தரவு எங்கே என்று கேட்டார். அதற்கு அவர்கள், நியமன உத்தரவு ஜீப்பில் இருப்பதாக கூறி அதை எடுத்து வருவதாக சொல்லிவிட்டு சென்றனர். ஆனால் அவர்கள் திரும்பி வரவே இல்லை. இரண்டு பேரும் தாங்கள் வந்த ஜீப்பிலேயே தப்பி விட்டனர்.
கைது
அதன்பிறகுதான் தான் ஏமாற்றப்பட்டதை டெய்சி உணர்ந்தார். பின்னர் இதுபற்றி , போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய இரண்டு பேரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் எஸ்.பி. பட்டினம் பகுதியில் நவாப்பனை போலீசார் கைது செய்தனர். இவருக்கு பிரகாஷ் என்ற பெயரும் உண்டு.
ஐ.ஏ.எஸ். அதிகாரி போல்…
அவரிடம் விசாரித்தபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கைதான நாவப்பன் செங்கம் பகுதியை சேர்ந்தவர். இவர் ஐ.ஏ.எஸ்.,அதிகாரி போல நடித்து மோசடி செய்தது தெரியவந்தது.
அவர் உயர் அதிகாரிகள் என்று போலியாக ஐடி மற்றும் விசிட்டிங் கார்டு தயாரித்து வைத்துள்ளார். இந்த மோசடி பணத்தை வைத்து கொண்டு, இவர் ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். 10-க்கும் மேற்பட்ட துணை நடிகைகள், சின்னத்திரை நடிகைகளுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
அந்த நடிகைகளின் போட்டோக்கள் எல்லாம் அவரது ஸ்மார்ட் போனில் பதிந்து வைக்கப்பட்டு இருந்தது. சினிமா படம் எடுக்க போகிறோம் என்று சொல்லியே பல நடிகைகளை வலையில் விழ வைத்துள்ளார். கிட்டதட்ட 50-க்கும் மேற்பட்டோரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக இவர்கள் இருவரும் ஏமாற்றி பணம் பறித்துள்ளார்.
தலைமறைவாக உள்ள சுகாதாரத்துறை ஊழியர் ஜார்ஜ் பிலிப்பை தேடி வருகின்றனர்.
====
