இந்தியா முழுவதும் ஒரே நாளில் 9,851 பேருக்கு கொரோன- 273 பேர் இறப்பு
1 min read
ond day corona case in Indai 9.851 – death 273
5-5-2020
இந்தியா முழுவதும் ஒரே நாளில் கொரோனா 9,851 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். 273 பேர்இறந்துள்ளனர்
கொரோனா
இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்பாக தினமும் மத்திய சுகாதாரத்துறை காலையில் தகவலை வெளிட்டு வருகிறது. அதன்படி இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரத்து 770 பேர் ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் தற்போது ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 960 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 462 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.
273 பேர் சாவு
கடந்த 24 மணி நேரத்தில் அதாவது ஒரே நாளில் கொரோனாவுக்கு 273 பேர் இறந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 348 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாநிலம் வாரியாக…
மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்க்பட்டவர்களின் எண்ணிக்கையும் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கையும் (அடைப்புக்குறிக்குள்) மாநிலம் வாரியாக வருமாறு:-
மராட்டியம் – 77,793 (2,710)
தமிழ்நாடு – 27,256 (220)
டெல்லி – 25,004(650)
குஜராத் – 18,584 (1,155)
ராஜஸ்தான் – 9,862 ( 213)
உத்தர பிரதேசம் – 9,237 ( 245)
மத்திய பிரதேசம் – 8,762 ( 377)
மேற்கு வங்கம் – 6,876(355)
பீஹார் – 4.493 (29)
கர்நாடகா- 4,320( 57)
ஆந்திரா – 4,223 (71)
ஹரியானா – 3,281 (24)
தெலுங்கானா – 3,147(105)
காஷ்மீர் – 3,142 (105)
ஒடிசா- 2.478(7)
பஞ்சாப்- 2,415(47)
அசாம் – 1,988-(4)
கேரளா – 1,588 (14)
உத்தரகாண்ட் – 1,153(10)
ஜார்க்கண்ட்-783 -(6)
சத்தீஸ்கர்-756 (2)
திரிபுரா-644(0)
இமாச்சல பிரதேசம் -383 (5)
சண்டிகர் -301(5)
கோவா-106(0)
மணிப்பூர்-124(0)
\லடாக்-90-(1)
புதுச்சேரி- 82 ( 0)
நாகலாந்து-80-0
அருணாச்சல பிரதேசம்-42(0)
அந்தமான-33(0)
மேகாலயா-33(1)
மிசோரம்-17(0)
தாதர் மற்றும்நாகர் ஹவேலி-12(0)
சிக்கிம்-2(0)