இந்தியாவில், அமெரிக்காவை விட அதிகம் கொரோனா பாதிப்பு- டிரம்ப் சொல்கிறார்
1 min read
In India, Corona is more affected than the US, says Trump
7-5-2020
இந்தியாவிலும், சீனாவிலும் கொரோனா பரிசோதனையை அதிகம் செய்திருந்தால் அந்த நாடுகளில் அமெரிக்காவைவிட கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்திருக்கும் என்று டிரம்ப் கூறினார்.
அமெரிக்காவில் கொரோனா…
சீனாவில் உருவாக கொரோனா உலகம் முழுவதம் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தற்போது அமெரிக்காவில்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா பாதிப்பில் இந்தியா உலக அளவில் 5 -வது இடத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் அமெரிக்காவில்தான் கொரோனா பரிசோதனை அதிகமாக நடப்பதாவும், இந்தியாவிலும் சீனாவிலும் பரிசோதனை அதிகமாக நடந்திருந்தால் அமெரிக்காவைவிட அந்த நாடுகளில்தான்கொரோனா தாக்குதல் அதிகமாக இருப்பத தெரிய வந்திருக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.
இதுபற்றி அவர் கூறியதாவது:-
2 கோடி பரிசோதனைகள்
அமெரிக்காவில், கொரோனா அறிகுறி ஏற்படத் துவங்கியதுமே, பரிசோதனை நடத்தும் முயற்சிகள் தொடங்கப்பட்டு விட்டன. இதுவரை, அமெரிக்காவில் 2 கோடி பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக 19 லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துஉள்ளனர்.
ஆனாலர் மற்ற நாடுகளில், இந்த அளவுக்கு அதிகமான பரிசோதனைகள் நடத்தப்படவில்லை. குறிப்பாக, சீனாவிலும், இந்தியாவிலும் அதிகமான பரிசோதனைகள் நடத்தப்பட்டால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, அமெரிக்காவில் உள்ள எண்ணிக்கையை விட நிச்சயம் அதிகமாக இருக்கும்.
பெருமை
இந்தியாவில், 40 லட்சம் பேருக்கு தான் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக, அந்த நாட்டு சுகாதார அமைச்சகம் அறிவித்து உள்ளது. இதில், 2.36 லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவிலும் இது தான் நிலைமை. அதிக பரிசோதனைகள் நடத்தப்பட்டால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். எனவே, அதிக பரிசோதனைகள் நடத்தப்படுவதற்காக அமெரிக்க மக்கள் பெருமைப்பட வேண்டும். அமெரிக்காவில் பரிசோதனை நடத்தும் பணியில் இருக்கும் சுகாதாரத் துறை அதிகாரிகள், ஊழியர்களை பாாட்டுகிறேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.