இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறியது; புதிதாக 9,971 பேருக்கு கொரோனா
1 min read
India have 5th for corona ; 9,971 person affected
7-5-2020
இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 9,971 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பி் இந்தியா 5 வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
9,971 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கொரோனா நிலவரம் பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்தியாவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,971 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்து 628 பேர் ஆக உயர்துள்ளது.
இவர்களில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 406 பேர் தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 293 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.
287 பேர் சாவு
கடந்த 24 மணி நேரத்தில் அதாவது ஒரே நாளில் மட்டும் கொரோனாவுக்கு 287 பேர் இறந்துள்ளனர். இதனால் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 929ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது..
5-வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா
உலக நாடுகளில் வேகமாக பரவிய கொரோனா இந்தியாவில் மெதுவாகத்தான் காலடி எடுத்து வைத்தது. இதனால் இந்தியாவில் அதன் தாக்கம் அதிகமாக இருக்காது என்று பலரும் எண்ணி இருந்தோம். ஆனால் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி உலக அளவில் 5 -வது இடத்தை எட்டியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஜான் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம், உலகளவில் கொரோனா பாதிப்பில், அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில், இந்தியா, 5-வது இடத்தில் இருப்பதாக கூறியுள்ள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில்உள்ளது. இதற்கு அடுத்து பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் நாடுகள் உள்ளன.
இந்தியாவில் 2 லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, ஸ்பெயினை பின்னுக்கு தள்ளி இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் 2.41 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.