காஷ்மீரில் 2 நாட்களில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
1 min read
9 terrorists shot dead in Kashmir in 2 days
8-6-2020
காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதிகள்
காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதை தடுப்பதற்காக அந்த மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. ஆனாலும் அங்கு பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை கண்டுபிடித்து ஒடுக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம் பிஞ்சோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது. இதை அடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். அப்போது அவர்களுக்குள் துப்பாக்கி சண்டை ஏற்படடது.
9 பேர் சுட்டுக் கொலை
இதில் 4 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்படனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து மோதல் முடிவுக்கு வந்ததாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதனையடுத்து கடந்த 2 நாட்களில், 9 பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.