தாராவியில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது
1 min read
Corona's impact on Tarawi is diminishing
8-6-2020
தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. கடந்த 7 வாரமாக அங்கு இறப்பு ஏதும் இல்லை.
மராட்டியத்தில் கொரோனா
இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் தான் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது.
அங்கு புதிதாக இன்று (திங்கட்கிழமை) மட்டும் 2,553 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 88,528 ஆக உயர்ந்துள்ளது.
மராட்டிய மாநிலத்தில் இன்று மட்டும் 109 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு இறந்தவர்களின மொத்த எண்ணிக்கை 3,169 ஆக அதிகரித்தது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 1,661 பேர் குணம் அடைந்தனர். இதனையடுத்து மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 40,975 ஆனது. தற்போது 44,374 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாராவி
மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகமாக இருந்தாலும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மும்பை தாராவியில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது.
மும்பையின் மற்ற பகுதிபோல் தாராவியிலும் கொரோனா பரவல் அதிகமாகத்தான் இருந்தது.
கடந்த 7 நாட்களாக தாராவியில் நோய் பாதிப்பு குறைந்து வருகிறது. அதோடு 7 நாட்களாக அந்த பகுதியில் யாரும் பலியாகவில்லை.
கடந்த (ஜூன்) 1 ந் தேதி 34 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. அதுவோ 7 -ந் தேதி 13 ஆக குறைந்தது.6-ந் 10 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தொடர்ந்து பாதிப்புகள் குறைந்து, கடந்த மே 30-ந் தேதிக்குப்பிறகு யாரும் பலியாகவில்லை என தெரியவந்தது.