இன்டர்நெட் கிடைக்காததால் வீட்டின் கூரை மீது அமர்ந்து பாடம் படித்த மாணவி
1 min read
Kerala Girl sits on the roof of a house and has no internet access
8-6-2020
கேரளாவில் இன்டர்நெட் இணைப்பு கிடைக்காததால் கல்லூரி மாணவி வீட்டின் கூரை மீது அமர்ந்து பாடம் படித்தார்.
பள்ளிகள் இயங்கவில்லை
கொரோனா பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பல மாநிலங்ங்களில் மேல்நிலைப்பள்ளி இறுதித் தேர்வு நடத்தப்பட வில்லை. கல்லூரிகளிலும் தேர்வுகள் நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் மாணவ-மாணவிகளில் படிப்பு பாதிக்காமல் இருக்க பல நகரங்களில் ஆன்-லைன் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. இதன் மூலம் மணவ-மாணவிகள் வீட்டில் இருந்தபடி லேப்-டாப் மூலம் ஆசிரியர்கள் நடத்தும் பாடத்திதை படிக்கிறார்கள்.
பொதுவாக செல்போனிலோ, லேப்-டாப்பிலோ இன்டர்நெட் இணைப்பு சரியாக கிடைக்காவிட்டால் சிக்னல் கிடைக்கும் இடத்திற்கு சென்று பயன்படுத்துவார்கள். அதன்படி சிக்னல் கிடைக்காததால் கேரளாவில் ஒரு மாணவி தன் லேப்-டாப்பை வீட்டின் கூரைமீது கொண்டு சென்று பாடம் படித்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த மாணவியின் பெயர் நமீதா. மலப்புரம் மாவட்டத்தில் கூத்தக்கல் பகுதியைசேர்ந்தவர். இவர் குட்டிபுரத்தில் உள்ள ஒரு கல்லூியில் மூன்றாம் ஆண்டு பி.ஏ. படித்து வருகிறார்.
இவர் படிக்கும் கல்லூரியில் ஆன்-லைன் மூலம் வகுப்புகள் தொடங்கப்பட்டன.
மாணவி நமீதாவும் தனது ஆன்டிராய்டு போன் மூலம் பாடம் படிக்க முனைந்தார். ஆனால் அவரது வீட்டில் சிக்னல் கிடைக்காமல் பாடத்தை கவனிக்க முடியவில்லை. இதனால் அவர் வீட்டின் கூரை மீது ஏறி அமர்ந்து ஆன்லைன் வகுப்புகளை கவனித்தார்.
மாணவி கூரை மீது ஏறி அமர்ந்து பாடம் படிப்பதை அவர் சகோதரி எதேச்சையாக வாட்ஸ்அப்பில் பதிவு செய்து அனுப்பினார். அது தற்போது வைரலாக பரவி வருகிறது. மாணவியின் ஆர்வத்தை பாராட்டியும், விமர்சித்தும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து பதிவிட்டனர்.
பாராட்டு
இந்த தகவல் அரசின் கவனத்திற்கும் சென்றது. கோட்டக்கல் எம்.எல்.ஏ. சையத் அபித் ஹூசேன் தாங்கல், முகமது பஷீர் எம்.பி. ஆகியோர் மாணவி நமீதாவுக்கு பாராட்டு தெரிவித்தனர். மேலும் பல தொழில்நுட்ப நிறுவனங்களும் பாராட்டு தெரிவித்ததுடன் அதிவேக இணைப்பு கொடுப்பதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மாணவி தற்கொலை
கேரளாவில் ஆன்-லைன்மூலம் படிக்க வசதி இல்லாத தேவிகா என்ற 9-ம் வகுப்பு மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்த சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.