ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு மத்திய மந்திரி பதவி- மோடி முடிவு
1 min read
Modi decision to appoint retired officials
8-6-2020
ஓய்வு பெற்ற திறமையான அதிகாரிகள் சிலரை மத்திய மந்தியாக்க பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிகாரிகள்
திறமையாக அதிகாரிகள் எந்த காலத்திலும் அரசியில் குறுக்கீடுக்கு மதிப்பு கொடுக்க மாட்டார்கள். அவர்களால்தான் ஒரு திட்டத்தை செம்மையாக செயல்படுதத்த முடியும். அப்படிப்பட்ட அதிகாரிகளை மந்திரிகளாக்கி அவர்களுக்கு முழு சுதத்திரம் கொடுத்தால் அவர்களின் துறை சிறப்பாக அமையும். அது நாட்டுக்கும் நல்லது.
நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது ரிசர்வ் வங்கி கவர்னராக பணிபுரிந்த மன்மோகன் சிங்கை நிதி மந்திரி ஆக்கினார். அவர்தான் இந்தியாவில் பொருதார மறுமலர்ச்சியை கொண்டு வந்தார். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. நரசிம்மராவ் மன்மோகன் சிங் நடவடிக்கையில் தலையிடவே இல்லை.
இதேபோல் தற்போது வெளியுறவுத் துறை மந்திரியாக ஜெய்சங்கரை பிரதமர் நரேந்திரமோடி நியமித்து உள்ளார். இவர் ஓய்வு பெற்ற அதிகாரி. அதேபோல் விமான போக்குவரத்து துறை மந்திரியாக இருக்கும் ஹர்தீப் சிங் பூரியும் ஓய்வு பெற்ற அதிகாரிதான். இவர்களின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் அரசியல்வாதிகளின் இடையூறுகளில் சிக்க மாட்டார்கள்.
மந்திரி சபை மாற்றம்
இது பிரதமர் மோடிக்கு பிடித்து இருப்பதாக கூறப்படுகிறது. எனவே மேலும் சில ஓய்வு பெற்ற அதிகாரிகளை மத்திய மந்திரியாக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போதுள்ள மந்திரி சபையை மாற்றி அமைக்கும் போது அதிகாரிகள் மத்திய மந்திரிகளாக வாய்ப்பு உண்டு என்று கூறப்படுகிறது.
தற்போதுள்ள மத்திய மந்திரிகளில் சிலரது செயல்பாடு பிரதமருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களை மந்திரிப் பதவியில் இருந்த நீக்கிவிட்டு, அவர்களுக்குப்பதில் ஓய்வு பெற்ற அதிகாரிகளை நியமிக்க உள்ளாராம். நீக்கப்பட்ட மத்திய மந்திரிகளுக்கு கட்சியில் பதவி கொடுப்பார்களாம். இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் மந்திரி சபை மாற்றம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையில் மோடியும் அமித்ஷாவும் தீவிரமாக இறங்கி உள்ளதாகவும் கூறுகிறார்கள்.
இப்போதுள்ள நிலையில் சட்டம் மற்றும் ஐ.டி., துறைகளை கவனித்து வரும் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத், மனித வள மேம்பாட்டு துறை மந்திரி ரமேஷ் போக்ரியால் ஆகியோர் கட்சிப் பணிக்கு மாற்றப்படுவார்கள் என்றும் பேச்சு அடிபடுகிறது.