கொரோனாவுக்க மலையாள நடிகர் மரணம்
1 min read
Malayalam actor died for corona
10-6-2020
கொரோனாவுக்கு மலையாள நடிகர் இறந்தார்.
மலையாள நடிகர்
உலகம் முழுவதும் பரவி பலரை கொன்று குவிக்கும் கொகொரோனா இந்தியாவிலும் பரவிஉள்ளது. இன்று எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனும் கொரோனாவுக்கு இறந்துள்ளார்.
இந்த கொரோனாவால் திரையுலகத்தினரும் பாதிக்கப்பட்டிருகின்றனர் கடந்த சில நாட்களுக்கு முன்வு இந்தி பட இசை அமைப்பாளர், தயாரிப்பாளர் என சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தனர்.
தற்போது மலையாள நடிகர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். அவரது பெயர் எஸ்.ஏ. ஹாசன்.
தொழில் அதிபர்
இவர் தொழில் அதிபரும்கூட. இவர் கேரள மாநிலம் ஆலுவா அருகில் உள்ள சங்கரன்குழியை பூர்வீகமாகக் கொண்டவர். ”ஹலோ துபாய்க்காரன்” என்ற மலையாள படத்தைத் தயாரித்து அதில் நடித்தும் இருக்கிறார்.
தற்போது துபாயில் டெக்ஸ்டைல் தொழிலில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹாசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே சார்ஜாவின் ரஸ் அல் ஹைமா பகுதியில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
சாவு
ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இறந்த ஹாசனுக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.