போலீஸ்காரர் கத்தியால் குத்திக் கொலை
1 min read
10.6.2020
Policeman stabbed to death with a knifeதூத்துக்குடி மத்திய காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் புங்கலிங்கம் (34). வடபாகம் போலீஸ் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வந்தார். நேற்றுமுன்தினம் இவர் தூத்துக்குடி – பாளை ரோட்டில் எம்ஜிஆர் பூங்கா அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது புங்கலிங்கத்திற்கும், அங்கு நின்ற வாலிபர் ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் அந்த வாலிபர், புங்கலிங்கத்தை கத்தியால் சரமாரியாக குத்தியதோடு, கொலை மிரட்டலும் விடுத்து தப்பியோடி விட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு இன்று காலை புங்கலிங்கம் இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள மறவன்மடம், திரவியபுரத்தைச் சேர்ந்த செல்வம் (44) என்பவரை கைது செய்தனர். முதலில் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. கைதான செல்வம் எம்ஜிஆர் பூங்காவில் காவலாளியாக உள்ளார். செல்வத்திற்கும், புங்கலிங்கத்திற்கும் ஏதேனும் முன்விரோதம் உள்ளதா? என்பது குறித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.