பலாப்பழத்தில் விஷம் வைத்து 3 பசுக்கள் கொலை
1 min read
3 Killed 3 of cows with poison in jackfruit
11-6-2020
பலாப்பழகத்தில் விஷம் வைத்து 3 பசுக்கள்கொல்லப்பட்டன.
யானை கொலை
கேரளாவில் அன்னாசிப் பழத்தில் வெடிகுண்டு வைத்து கர்ப்பிணி யானை ஒன்று கொல்லப்பட்டது. அந்த யானை வெடிகுண்டு அன்னாசிப்பழத்தை தின்றவுடம் அது வெடித்து வாயில் காயம் ஏற்பட்டது. அந்த வலியை தாங்க முடியாமல் 3 நாட்களாக தண்ணீர் மூழ்கி நின்று பரிதாபமாக செத்தது.
அதேபோல் கர்நாடக மாலத்தில் பலாப் பழத்தில் விஷம் வைத்து 3 பசுக்கள் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
கர்ப்பிணி யானை
சிக்கமகளூரு தாலுகா பசரவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கிட்டே கவுடா. இவருக்கு சொந்தமாக 2 பசுக்கள் இருந்தன. அதே கிராமத்தை சேர்ந்த மது என்பரிடம் ஒரு பசு இருந்தது.
3 பசுக்கள் செத்தன
இந்த 3 பசுக்களும் காட்டுக்கு மேயச் சென்றன. அப்போது ஒரு தோட்டத்தின் அருகே கிடந்த பலாப்பழத்தை தின்றன. சிறிது நேரத்தில் 3 பசுக்களும் பரிதாபமாக செத்தன.
இது பற்றி தகவல் கிடைத்ததும் பசுக்களின் உரிமையாளர்களான கிட்டே கவுடாவும், மதுவும் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இதுபற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அடிக்கடி தோட்டத்துக்குள் சென்று மாடுகள் மேய்ந்ததால் ஆத்திரம் அடைந்த தோட்ட உரிமையாளர் ஒருவர், பலாப்பழத்தில் விஷம் வைத்து அவற்றை கொன்றது தெரியவந்தது. பலாப்பழத்தில் விஷம் வைத்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.