July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் ஒரே நாளில் 1,875 பேருக்கு கொரோனா

1 min read
Corona to 1,875 people in one day in Tamil Nadu

11-6-2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,875 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

1,875 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பற்றிய தகவல்களை தமிழக சுகாதாரத்துறை தினமும் மாலையில் வெளியிட்டு வருகிறது.
அதன்படி தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்தாவது:-
தமிழகத்தில் இன்று(வியாழக்கிழமை) மேலும் 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் 38 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38,716 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 77 பரிசோதனை மையங்கள் உள்ளன. இதன் மூலம் இன்று ஒரே நாளில் 16,829 மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இதுவரையில் மொத்தம் 6,55,675 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.


23 பேர் சாவு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 23 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இதில் சென்னையில் 19 பேரும், செங்கல்பட்டில் 2 பேரும், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் தலா ஒருவரும் ஆவர்.

இன்றைய உயிரிழப்புகளில் 21 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 2 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் இறந்துள்ளனர்.
இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 349 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 1,372 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 20,705 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 17,659 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் மொத்த பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,999 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 32,422 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 4,295 பேரும் உள்ளனர். இவ்வாறு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு இருக்கிறது.

சென்னையில் மட்டும்

சென்னையில் இன்று மட்டுமு் 1,407 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 27,398 ஆக உயர்ந்துள்ளது.‘

தனிமைப்படுத்தப்பட்ட தெருக்கள்

இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு காரணமாக 360 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ராயபுரத்தில் 78 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

<

கோடம்பாக்கம் மண்டலத்தில் 73 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்தபடியாக திரு.வி.க. நகரில் 54 தெருக்கள் கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்ட வாரியாக…

இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வருமாறு:-

  1. சென்னை – 1406 (வெளியில் இருந்து வந்தவர்கள் ஒருவரை சேர்க்காமல்)
  2. காஞ்சிபுரம் – 19
  3. செங்கல்பட்டு – 127
  4. திருவள்ளூர் – 72
  5. அரியலூர் – 3
  6. கோவை – 3
  7. கடலூர் – 19
  8. தருமபுரி – 1
  9. திண்டுக்கல் – 11
  10. கள்ளக்குறிச்சி – 4
  11. கன்னியாகுமரி – 3
  12. மதுரை – 20
  13. நாகப்பட்டினம் – 16
  14. நாமக்கல் – 10
  15. பெரம்பலூர் – 2
  16. புதுக்கோட்டை – 2
  17. ராமநாதபுரம் – 10
  18. ராணிப்பேட்டை – 26
  19. சேலம் – 10
  20. சிவகங்கை – 7
  21. தென்காசி – 5
  22. தஞ்சாவூர் – 8
  23. தேனி – 3
  24. திருப்பத்தூர் – 4
  25. திருவண்ணாமலை – 20
  26. திருவாரூர் – 16
  27. தூத்துக்குடி – 6
  28. திருநெல்வேலி – 3
  29. திருச்சி – 10
  30. வேலூர் – 12
  31. விழுப்புரம் – 7
  32. விருதுநகர் – 2

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.