July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

சென்னை ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிய கொரோனா வாலிபர்- தென்காசி ஆஸ்பத்திரியில் அனுமதி

1 min read
Corona youth escaped from Chennai hospital admitted to Tenkasi hospital

11-6-2020
கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் தப்பி சொந்த ஊரான தென்காசி குத்துக்கல் வலசைக்கு சென்றார். அதிகாரிகள் அவரை மடக்கி தென்காசி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

குத்துக்கல் வலசை வாலிபர்

சென்னையில் நாளுக்குநாள் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் வெளியூரில் இருந்து தொழில் நிமித்தமாக சென்னை வந்திருப்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்லவே விரும்புகிறார்கள். அந்த வகையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றவண்ணம் இருக்கிறார்கள்.

தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை வடக்கு ரத வீதியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கால் அவரால் உடனடியாக ஊருக்கு திரும்ப இயலவில்லை. சென்னையிலே இருந்த அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது .

தப்பி ஓட்டம்

இதனால் சென்னையில் அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். ஆனால் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடி சொந்த ஊரான குத்துக்கல் வலசைக்கு வந்தார்.

இதுகுறித்து சுகாதாரத் துறை, வருவாய்த்துறை யினருக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின் பேரில் தென்காசி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறையினர் விரைந்து சென்று அந்த இளைஞரை அழைத்துச் சென்று தென்காசி அரசு ஆஸ்பத்திிரயில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இப்போது இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

தனிமைப் படுத்தினர்

மாவட்ட கலெக்டரின் உத்தரவுபடி தென்காசி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் வெ.சண்முகசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பையா, தென்காசி வட்டார சுகாதார அலுவலர் வேலு, செங்கோட்டை வட்டார சுகாதார அலுவலர் ரகுபதி, குத்துக்கல்வலசை ஊராட்சி செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் குத்துக்கல்வலசை பகுதிக்கு விரைந்து சென்று அந்த இளைஞரின் வீடு உள்ள குத்துக்கல்வலசை வடக்கு ரதவீதியை கம்புகளால் தடுப்பு ஏற்படுத்தினர். அந்த பகுதியை உடனடியாக தனிமைப்படுத்தினார்கள். அப்பகுதியில் உடனடியாக கிருமிநாசினி தெளிக்கும் பணி மற்றும் பிளிச்சிங் பவுடர் தூவும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.மேலும் அந்த இளைஞரின் குடும்பத்தினர் தனிமைப் படுத்தப் பட்டனர்.

மேலும் குத்துக்கல்வலசை ஊராட்சி தூய்மை பணியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் அனைவரும் அந்த பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்அந்த பகுதி உடனடியாக உள்ளாட்சித்துறை சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. அந்த தெருவில் உள்ள பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வருவதற்கும், வெளிநபர்கள் அந்த பகுதிக்கு செல்வதற்கும் அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர்.

மேலும் குத்துக்கல்வலசையில் டீ கடைகளில் பேப்பர் கப் பயன்படுத்தவேண்டும். அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். வெளி மாவட்டங்கள் வெளி மாநிலங்களில் இருந்து யாராவது வந்தால் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.