July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

நர்ஸ் திருமணத்தை தடுத்து நிறுத்திய டிரைவர் கைது

1 min read

11/6/2020

Driver arrested for interrupting nurse marriage

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்கி(26). இவர் சென்னையில் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

பெரணமல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் நர்ஸாக பணியாற்றி வருகிறார். தங்கை முறையான இளம்பெண்ணை ராம்கி 2வது திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த உறவினர்கள், ராம்கியை கடுமையாக எச்சரித்துள்ளனர். என்றாலும் அவர் தனது பிடிவாதத்தை கைவிடவில்லையாம்.

இந்நிலையில் அந்த இளம்பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி மணமகனை தேடி வந்தனர். இதையடுத்து ஒரு வாலிபருடன் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து திருமணம் செய்வதற்கான நிச்சயதார்த்தம் செய்ய தேதி வைத்துள்ளனர். இதையறிந்த ராம்கி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த மணமகனின் வீட்டிற்கு சென்று அவர்களிடம் கூறி நிச்சயதார்த்தத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். இதையறிந்து மனமுடைந்த இளம்பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே அவரை பெற்றோர் காப்பாற்றி ஆறுதல் கூறினர்.

இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் பெரணமல்லூர் போலீசில் நேற்று புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோமளவல்லி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி ராம்கியை கைது செய்தனர். மேலும் அவரை செய்யாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.