July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

காதலனுடன் விஷம் குடித்த கர்ப்பிணி சாவு -காதலன் கவலைக்கிடம்

1 min read

கவுசல்யா

11.6.2020

Pregnant woman dies of poisoning with boyfriend

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை ரயில்வே நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் கவுசல்யா (17). இவர் தற்போது பிளஸ்- 2 தேர்வெழுதிவிட்டு வீட்டில் இருந்தார். இதே பகுதியை சேர்ந்தவர் சுப்ராயன் மகன் சந்தோஷ்குமார் (22). பட்டதாரியான இவரும் கவுசல்யாவும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். கொரோனா ஊரடங்கின் போது, இருவரும் நெருங்கி பழகியதில் தற்போது கவுசல்யா 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இதுகுறித்து கவுசல்யா தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் சந்தோஷ்குமார் வீட்டிற்கு சென்று திருமணம் குறித்து பேசியுள்ளனர். அப்போது, சந்ேதாஷ்குமாரின் தாயார் ராணி, சகோதரர் சதீஷ் மற்றும் தாய் மாமன் ஆகிய 3 பேரும் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவு இதுதொடர்பாக பிரச்னை ஏற்பட்டு சந்தோஷ்குமாரை அவரது அண்ணன் தாக்கியுள்ளார். இதையடுத்து அவர் தனது காதலியை சென்று சந்தித்துள்ளார். இனிமேல் நமக்கு திருமணம் செய்து வைக்கமாட்டார்கள் என மனமுடைந்து காதல்ஜோடி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். அப்போது, வீட்டில் இருந்த விஷத்தை சாப்பிட்டுவிட்டு கவுசல்யா தனது வீட்டுக்கு சென்று படுத்துவிட்டார். சந்தோஷ்குமார் அருகில் உள்ள அவரது சித்தப்பா வீட்டுக்கு சென்று படுத்து தூங்கியுள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கவுசல்யாவின் தம்பி சிறுநீர் கழிப்பதற்காக தூக்கத்தில் இருந்து எழுந்து லைட் போட்டுள்ளார். அப்போது, கவுசல்யா வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைக்கண்டு அவர் கூச்சல் போடவே உறவிர்கள் எழுந்து வந்தனர். உடனடியாக கவுசல்யாவை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு ெகாண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து சந்தோஷ்குமாரிடம் தெரிவிக்க அவரது நண்பர்கள் சென்றபோது, அவரும் வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதையடுத்து அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.