July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிகத்தில் கொரோனா பலியை மறைக்கவில்லை- எடப்பாடி பழனிசாமி பேட்டி

1 min read
The death toll was not covered by Corona-CM

11-6-2020

தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்கவில்லை என்றும் வெளிப்படையாக அறிவிக்கப்படுகிறது என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பாலம் திறப்பு விழா

சேலத்தில் ரூ.441 கோடி செலவில் கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தையும், ரெயில்வே மேம்பாலத்தையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை )திறந்து வைத்தார்.
அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

சேலம் மக்களின் நீண்ட நாள் கனவான ஈரடுக்கு மேம்பாலம் இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த ஈரடுக்கு மேம்பாலத்திற்கு ஜெயலலிதா பெயரும், ரெயில்வே மேம்பாலத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரும் சூட்டப்பட்டது.

மறைக்கவில்லை

தமிழகத்தில் கொரோனா காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுவதாக கூறுவது பொய். இறந்தவர்களின் எண்ணிக்கை வெளிப்படையாக அறிவிக்கப்படுகிறது. நாங்கள் எதையும் மறைக்கவில்லை. மறைக்கவும் முடியாது. உயிரிழப்புகளை மறைப்பதால், அரசுக்கு என்ன பயன் கிடைக்கப்போகிறது?

தமிழகத்திலர் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக தான் உள்ளது. கொரோனா பாதிப்புடன் பல்வேறு நோய் உள்ளவர்கள்தான் இறப்புக்கு ஆளாகிறார்கள். அதனால் தான் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது.

சமூகப் பரவல் இல்லை

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. தமிழகத்தில் தான் அதிக அளவில் வென்டிலேட்டர்கள் உள்ளன.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூகபரவலாக மாறவில்லை.
சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ளதால் பாதிப்பு அதிகமாக உள்ளது. சேலம் உள்பட பல மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் உள்ளது. கட்டுப்பாடுகள் இல்லாவிட்டால், கொரோனா வேகமாக பரவி விடும்.
தமிழகத்தில் அனைத்து தளர்வுகளும் அளிக்கப்பட்டுவிட்டன. வீட்டை விட்டு வெளியே சென்றால் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றினால் தான் கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.