சென்னை ராயபுரத்தில் மொத்தம் 4405 பேருக்கு கொரோனா
1 min read
Total of 4405 corona in Chennai Rayapuram
11-6-2020
சென்னை ராயபுரத்தில் 4,405 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
இந்தியாவில் மராட்டிய மாநிலத்திற்கு அடுத்தபடியாக சென்னையில்தான் அதிகபடியாக கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. சென்னையிலும் ராயபுரம் மண்டலத்தில்தான் ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இரக்கிறார்கள்.
தமிழகத்தில் நேற்று (புதன்கிழமை) புதிதாக கொரோனா 1,927 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் சென்னையை சேர்ந்தவர்க்ள மட்டும் 1,392 பேர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,937 ஆக அதிகரித்துள்ளது.
இதில் 12,507 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 258 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் கொரோனா பாதிப்புகள் பற்றி சென்னை மாநகராட்சி அறிவித்து வருகிறது.
இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 60.15 சதவீதம் பேரும், பெண்கள் 39.84 சதவீதம் பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 0.01 சதவீதத்தினரும் உள்ளனர். கொரோனாவால் இறந்தவர்களை பொறுத்தவரையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 54 பேரும், திரு.வி.க.நகரில் 44 பேரும்,தேனாம்பேட்டையில் 39 பேரும், தண்டையார்பேட்டையில் 31 பேரும், அண்ணாநகரில் 23 பேரும் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி ராயபுரம் மண்டலத்தில்தான் தொடர்ந்து பாதிப்பு அதிகமாக உள்ளது.
கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை மண்டல வாரியாக வருமாறு:-
ராயபுரம் – 4405
தண்டையார்பேட்டை – 3405
தேனாம்பேட்டை – 3069
கோடம்பாக்கம் – 2805
திரு.வி.க.நகர் – 2456
அண்ணாநகர் – 2362
அடையாறு – 1481
வளசரவாக்கம் – 1170
திருவொற்றியூர் – 972
அம்பத்தூர் – 901
மாதவரம் – 724
ஆலந்தூர் – 521
பெருங்குடி – 481
சோழிங்கநல்லூர் – 469
மணலி – 383