தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜஷ் மாற்றம்- ராதாகிருஷ்ணன் நியமனம்
1 min read
Beela Rajash transfer from Health Secretary- Radhakrishnan appointment this post
12-6-2020
தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்து ராஜேஷ் மாற்றப்பட்டார். அவருக்குப் பதில் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.
பீலா ராஜேஷ்
தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளராக இருந்து வந்தவர் பீலா ராஜேஷ். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் ஒரு டாக்டரும் கூட. இவர் கொரோனா பரவி வரும் போது அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை தினமும் விளக்கமாக பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்துவந்தார். இதன் மூலம் அவர் பாமர மக்களுக்கும் டெலிவிஷன் மூலம் அறியப்பட்டார்.
இந்த நிலையில் அவர் சுகாதாரத்துறை செயலாளர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டார். அவர் வணிகவரித்துறை செயலாளராக மாற்றப்பட்டார்.

ராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறை செயலாளர் பொறுப்புக்கு ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் தற்போது கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே நிர்வகித்துவரும் வருவாய் நிர்வாக ஆணையாளர்பொறுப்பையும் தொடர்ந்து கவனித்து வருவார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் இதற்கு முன்பு கூட சுகாதாரத்துறை செயலாளராக இருந்துள்ளார். மாவட்ட கலெக்டராக பணியாற்றியபோது புயல், சுனாமி போன்ற இயற்கை இடர்பாடுகளை திறமையாக கையாண்டு நற்பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.