சென்னையில் முழு ஊரடங்கா? – ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்
1 min read
Full curfew in Chennai? - Tamil Nadu Government Response to High Court
12-6-2020
சென்னையில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா என்ற கேள்விக்கு சென்னை ஐகோர்ட்டில் பதில் அளித்துள்ளது.
ஊரடங்கு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு ஐந்து கட்டஙகளாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகள்
ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் சென்னையில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறது. அதன் காரணமாக சென்னையில் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று வதந்தி பரவியது. அதாவது ஜூன் 15-ம் தேதி முதல் மீண்டும் நாடு முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தப்படலாம் என்று தகவல் பரவி வருகிறது.
ஐகோர்ட்டு கேள்வி
இது தொடர்பான வழக்கு நேற்று (வியாழக்கிழமை) சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வினீத் கோத்தரி மற்றும் ஆர்.சுரேஷ்குமார், கொரோனா அதிகரித்து வருவதால் சென்னையில் ஊரடங்கை கடுமையாக்கும் திட்டம் உள்ளதா? என கேள்வி எழுப்பினர். தற்போது பின்பற்றப்படும் நடைமுறையில் மாற்றம் ஏதும் கொண்டு வரும் திட்டம் அரசிடம் உள்ளதா? இது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்தனர். மக்கள் நலனை கருத்தில் கொண்டு கேள்வி எழுப்புவதாக நீதிபதிகள் வினீத் கோத்தரி, ஆர்.சுரேஷ்குமார் தெரிவித்தனர்.
ஐகோர்ட்டு உத்தரவு படி தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளதாவது:-
இல்லை
சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை. சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்கான இ-பாஸ் சேவை நிறுத்தப்படவில்லை. நிறுத்தப்படுவதாக கூறுவது வதந்தியே. நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மருத்துவக்குழுவினரின் பரிந்துரையின் அடிப்படையிலே அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு தமிழக அரசு கூறியுள்ளது.
தமிழக அரசின் விளக்கத்தை கேட்ட நீதிபதிகள் வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.