கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பிறகுதான் பள்ளிக்கூடங்கள் திறப்பு- முதல்வர் திட்டவட்டம்
1 min read
The opening of schools after the corona was restricted - chief minister told
12-6-2020
கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பின்னர்தான் பள்ளிக்கூடம் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
எடப்பாடி பழனிசாமி
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பகுதி பாசனத்திற்காக தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேகியதாவது:-
தமிழகத்தில் அமைக்க உள்ள 8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டமாகும். இதற்கு தமிழக அரசு உதவி தான் செய்கிறது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நிலங்கள் எடுக்கப்பட்டு தான் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் கொரோனாவுக்காக மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என வெளிவரும் தகவல் தவறானது. இப்படி தவறான செய்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனாவை கட்டுப்படுத்த வல்லரசு நாடுகளே திணறி வருகிறது. தமிழகத்தில் அரசின் ஊரடங்கு விதிகளை மக்கள் கடைபிடிக்காதது வருத்தமளிக்கிறது.
கொரோனா தொற்றின் வீரியத்தை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணிவதில்லை. மக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம். தயவு செய்து அரசுக்கு ஒத்துழைப்பு தாருங்கள். அர்ப்பணிப்பு உணர்வுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள்.
பள்ளிக்கூடம்
கொரோனா பரவல் குறித்து எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு தவறாக விமர்சிக்கின்றனர்.
பள்ளிகளில் அதிக கட்டணம் குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா கட்டுக்குள் வந்தபிறகு பள்ளிகள் படிப்படியாக திறக்கப்படும். கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் மத்திய அரசு நிர்ணயித்ததை விட தமிழகத்தில் குறைவாக தான் உள்ளது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.