சென்னையிலிருந்து பைக்கில் தூத்துக்குடி வந்த போலீஸ்காரருக்கு கொரோனா
1 min read
15.6.2020
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு பைக்கில் வந்த போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ெகாரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் இருந்து கடந்த ஒரு மாதத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வந்து உள்ளனர். டெல்லி, மும்பை, கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்த கொரோனா தொற்றுகள் கட்டுப்படுத்தப்பட்டன. தற்போது சென்னையில் இருந்து இ-பாஸ் மூலம் தூத்துக்குடிக்கு வந்தவர்களால் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன் தினம் 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று மாலை மாலை வரையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 427 ஆக அதிகரித்திருந்தது. நேற்று பகலில் 13 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது அரசு மருத்துவமனையில் 111 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.
இதற்கிடையே சென்னை ஆவடி 2வது பட்டாலியனில் செக்யூரிட்டி பிராஞ்சில் பணிபுரியும் இளம் போலீஸ்காரர் ஒருவர் கடந்த இரு நாட்களுக்கு முன் விடுமுறை எடுத்துக் கொண்டு ெசாந்த ஊரான ஓட்டப்பிடாரம் பகுதிக்கு வந்துள்ளார். அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் நேற்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.