July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் திருமணம் -டிஒய்எப்ஐ தலைவரை மணந்தார்

1 min read

கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணா விஜயன், முகமது ரியாஸ் திருமணம் 15ம் தேதி திருவனந்தபுரத்தில் நடந்தது

15.6.2020

Kerala Chief Minister Pinarayi Vijayan’s daughter marries DYFI leader

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு வீணா விஜயன் என்ற ஒரு மகள் உள்ளார். இவர் பெங்களூருவில் சாப்ட்வேர் நிறுவன இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவருக்கும், டிஒய்எப்ஐ அகில இந்திய தலைவர் முகமது ரியாசுக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கொரோனா லாக்-டவுனால் அப்போது திருமணம் நடத்த முடியவில்லை. இதையடுத்து இவர்களுக்கு இன்று(15ம் தேதி) திருவனந்தபுரத்தில் திருமணம் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் மிக எளிமையான முறையில் திருமணம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இருவீட்டாரின் ெநருங்கிய உறவினர்கள் 50 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

இவர்கள் இருவரும் திருமணமாகி விவாகரத்து ஆனவர்கள். வீணா விஜயனுக்கு ஒரு மகன் உள்ளார். முகமது ரியாசுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முகமது ரியாசின் தந்தை அப்துல் காதர் கோழிக்கோடு முன்னாள் போலீஸ் கமிஷனர் ஆவார்.

எஸ்எப்ஐ மூலம் அரசியலுக்குள் நுழைந்த முகமது ரியாஸ், தலா ஒருமுறை சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு ேதால்வியடைந்தார். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு டிஒய்எப்ஐ அகில இந்திய தலைவராக ேதர்ந்தெடுக்கப்பட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.