21-ந்தேதி சூரியகிரகணத்துடன் கொரோனா பரவல் முடிவுக்கு வருமா? அணுவிஞ்ஞானி ஆறுதல் தகவல்
1 min read
Corona go away after solar eclipse
சென்னையைச் சேர்ந்த சுந்தர் கிருஷ்ணன், அணு மற்றும் புவியியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், கொரோனா பரவல் தொடர்பாக ஆறுதல் தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் சொன்ன விஷயம் இதோ:-
கடந்த 2019- ம்ஆண்டு இறுதியில் தோன்றிய சூரிய கிரகணத்தின்போது வெளியான ஆற்றல் காரணமாக அணுவில் பிளவு ஏற்பட்டு பரிணாம வளர்ச்சியில் கோவிட்-19 உருவாகியுள்ளது.
இதுகுறித்து நான் மேற்கொண்ட ஆய்வுகளில் கடந்த டிசம்பர் 26 அன்று தோன்றிய சூரிய கிரகணத்திற்குப் பிறகு நமது சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்கள் தம்மை மறு சீரமைத்துக் கொண்டது தெரியவந்தது.
இந்த ஆற்றல் காரணமாக பூமியின் வலிமையும் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இந்த மறுசீரமைப்பு காரணமாகப் பூமியின் மேல் பரப்பில் இந்த கொரோனா வைரஸ் தோன்றியிருக்கக்கூடும்.
அந்த கிரகணத்தின்போது வெளியான ஆற்றல் காரணமாக ஏற்பட்ட அணுச் சேர்க்கைகள், மற்றும் பிளவு காரணமாக நியூக்ளியஸ் உருவாக்கம் தொடங்கியிருக்கலாம். இதன் மூலம் கொரோனா வைரசின் உயிர் மூலக்கூறு கட்டமைப்பின் பிறழ்வு நடந்திருக்க வாய்ப்புள்ளது.
இந்த ஆய்வுகள் சரியாக இருந்தால், வரும் சூரிய கிரகணம் நமக்குத் திருப்புமுனையாக அமையும். அதாவது வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நிகழும் சூரிய கிரகணத்தின்போது சூரியனிலிருந்து வெளியாகும் ஆற்றல், இந்த வைரசைச் செயலிழக்கச் செய்துவிடும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
எனக் கூறியுள்ளார்.
அவரது எதிர்பார்ப்பு உண்மையாக அமைந்தால் உலகமே பெரும் நிம்மதி அடையும்.